Skip to main content

Advertisement

City, நாளை வென்றாக வேண்டும் !

Bournemouth-துக்கு எதிரான நாளைய பிரிமியர் லீக் ஆட்டத்தில் போட்டியிட, Manchester City முழு உடற்தகுதியைக் கொண்டிருக்கின்றதாம் !

எனினும், சிட்டிக்கு லீக் கிண்ணத்தை வெல்ல ஆசை இருந்தால், அவ்வாட்டத்தில் வெற்றிப் பெற்றாக வேண்டும்.

ஒரு வேளை, புள்ளிப்பட்டியலில் 77 புள்ளிகளைக் கொண்டு 2-ஆம் இடத்தில் இருக்கும் சிட்டி வெற்றிப் பெறத் தவறினால், நாளையே வெற்றிக் கிண்ணம் Arsenal வசமாவது உறுதியாகிவிடும்.  

Bournemouth - Manchester City மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, அதிகாலை மணி 2.30-க்கு, Astro அலைவரிசை 812-டிலும் Sooka-விலும் கண்டு களிக்கலாம்.

அதே சமயம், Chelsea - Tottenham மோதும் ஆட்டத்தை, அதிகாலை மணி 3.15-க்கு, Astro அலைவரிசை 811 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.

----------

அனைத்துலக பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும், விளையாட்டு வளர்ச்சி மற்றும் தேசிய வீரர்களின் நலனில் காட்டப்படும் முன்னுரிமையில், எந்தவொரு மாற்றமுமில்லை !

இன்று நடைபெற்ற 2025 தேசிய விளையாட்டு விருதுகள் விழாவில் உரையாற்றிய பிரதமர், மலேசியாவின் விளையாட்டு சாதனைகள் பெருமைக்குரியவை என்றும், அவை அடிக்கடி நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளையே மீறி வந்துள்ளன என்றும் கூறினார்.

அதோடு, வீரர்களின் ஒழுக்கமும் மன உறுதியும், நாட்டிற்குப் பெரும் வெற்றியைத் தேடித் தரும் சக்தி கொண்டவை என்பதை பிரதிபலிக்கின்றது, என்றாரவர்.

---------

இதனிடையே, இன்று நடைபெற்ற 2025 தேசிய விளையாட்டு விருதுகள் விழாவில், Chen Tang Jie-Toh Ee Wei, முறையே தேசிய விளையாட்டு வீரர், மற்றும் தேசிய விளையாட்டு வீராங்கனை விருதுகளைப் பெற்றுள்ளனர் !

அவ்விருதுகளை, ஒரே நேரத்தில் பெற்ற, முதல் கலப்பு இரட்டையர் ஜோடி என்ற பெருமையை, அவர்கள் பெற்றுள்ளனர். 

RAAGA Aaha Siranta Isai!