Skip to main content

Advertisement

Commonwealth போட்டியில் சிறக்கும் மலேசியர்கள் !

 

Commonwealth விளையாட்டுப் போட்டியில், மகளிர் ஒற்றையருக்கான திடல் போலிங் பிரிவின் தொடக்க ஆட்டத்தை, தேசிய வீராங்கனை Emma Firyana Saroji வெற்றியில் தொடங்கியுள்ளார் !

ஆடவர் இரட்டையர் பிரிவில் பங்கேற்ற தேசிய வீரர் Amirul Danial Abdul Rahim, Mohammad Soufi Rusli ஆகியோரும் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தனர்.

மலேசிய திடல் போலிங் வீரர்கள், நாளை அடுத்த சுற்றில் விளையாடுகின்றனர்.

2026 Commonwealth விளையாட்டுப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை, TV Okey அலைவரிசை 146, Sukan+ அலைவரிசை 806 ஆகியவற்றில், Astro-வில் காணலாம்.

-----------

தைவான் பொது பூப்பந்து போட்டியில், தேசிய ஆடவர் ஒற்றையர் Lee Zii Jia, 2-ஆம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் !

Justin Hoh-வும் அடுத்த சுற்றில் நுழைந்தார்.

அதே வேளை, ஆடவர் இரட்டையர் Tee Kai Wun - Yap Roy King, தோல்வியுற்று அப்போட்டியில் இருந்து வெளியேறினர்.

---------

உலக பூப்பந்து போட்டியில் இருந்து, Chen Tang Jie-Toh Ee Wei விலகிய போதிலும், மலேசியா தொடர்ந்து இரண்டு கலப்பு இரட்டையர் ஜோடிகளுடன் களமிறங்கவுள்ளது !

அவர்களுக்கு பதிலாக, உலகின் 43-ஆம் நிலை வீரர்களான Wong Tien Ci-Lim Chiew Sien, பிரதான சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.  

ஆரம்பத்தில் இந்த ஜோடி, காத்திருப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

----------

Formula 1 போட்டி அட்டவணையில், மலேசியா நிரந்தர இடத்தைப் பெற வேண்டுமானால், ஆண்டுக்கு குறைந்தது 300 மில்லியன் ரிங்கிட் செலவிட வேண்டியிருக்கும் !

அப்போட்டியை நடத்துவதற்கான உரிமக் கட்டணம், தற்போது 289 மில்லியன் ரிங்கிட் முதல் 340 மில்லியன் ரிங்கிட் வரை மதிப்பிடப்பட்டுள்ளதாக, செப்பாங் அனைத்துலக பந்தயத் திடல் தெரிவித்துள்ளது.

இப்பருவ F1 மோட்டார் பந்தயத்தின் நேரடி ஒளிப்பரப்பை BeIN அலைவரிசை 820 Astro-வில் கண்டு களிக்கலாம்.

---------

காற்பந்து திருவிழாவுக்கான  Brazil அணியில் தேர்வு செய்யப்படாததால், Chelsea-யின் பிரேசில் வீரர் Joao Pedro மிகவும் உற்சாகத்துடனும், தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற அதிகமான ஆவலுடனும் இருப்பதாக கூறப்படுகிறது !

Chelsea-யின் முதல், பருவத்துக்கு முந்தைய ஆட்டத்திலேயே அவர் குறுகிய நேரத்தில் hat-trick கோல்களை அடித்து அசத்தியது, புதிய பயிற்றுநர் Xabi Alonso-வை கவர்ந்துள்ளது. 

RAAGA Aaha Siranta Isai!