
Commonwealth விளையாட்டுப் போட்டியில், சில தேசிய வீரர்கள், பல விளையாட்டுகளில் களமிறங்குகின்றனர் !
பாரா உள்ளரங்கு சைக்கிளோட்ட விளையாட்டு, திடல் போலிங், எடை தூக்குதல் உள்ளிட்ட விளையாட்டுகளில், தேசிய வீரர்கள் போட்டியிடுகின்றனர்.
பதக்கப் பட்டியலில் மலேசியா 6 தங்கஙளுடன் 7-ஆவது இடத்தில் உள்ளது.
Commonwealth விளையாட்டுப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை, TV Okey அலைவரிசை 146, Sukan+ அலைவரிசை 806 ஆகியவற்றில், Astro-வில் கண்டு களிக்கலாம்.
---------
தைவானிய பொது பூப்பந்து போட்டியில், ஆடவர் ஒற்றையர் Justin Hoh, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் !
Lee Zii Jia-வும் தோற்றார்.
கலப்பு இரட்டையர் Chen Tang Jie - Clarissa San தோல்வியுற்று, அப்போட்டியில் இருந்து வெளியேறினர்.
----------
PSG-யின் Bradley Barcola-வை ஒப்பந்தம் செய்யும் வேட்கையில் உள்ளதாம் Liverpool !
இப்பருவ இறுதியில் அணியை விட்டு வெளியேறிய Mohamed Salah-வுக்கு மாற்றாக, Barcola-வைக் கொண்டு வர, Liverpool தீவிரமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
---------
Newcastle தலைமை பயிற்றுநர் பொறுப்பில் இருந்து Eddie Howe விலகவுள்ளதாக கூறப்படுகிறது !
அவருக்குப் பதிலாக, Al-Ahli பயிற்றுநர் Matthias Jaissle புதிய தலைமைப் பயிரற்றுநராக பொறுப்பேற்கவுள்ளதாகக் செய்திகள் வெளிவந்துள்ளன.
--------
MLS கிளப்பான Inter Miami-யுடனான அணி பயிற்சிக்குத் திரும்பியுள்ளார், Lionel Messi !
காற்பந்து திருவிழா இறுதியாட்டத்தில், அர்ஜென்டினா தேசிய அணிக்காக விளையாடிய பின்னர், 10 நாட்கள் கழித்து, அந்த கால்பந்து ஜாம்பவான் Miami-க்குத் திரும்பினார்.