Chelsea மத்திய திடல் வீரர் Enzo Fernandez மீது, Man City-க்கு இன்னமும் ஆர்வம் குறையவில்லையாம் !
சிட்டியை விட்டு Rodri சென்றதால் தற்போது அவ்வணியின் மத்திய திடல் அரண் ஆட்டம் கண்டு போயுள்ளது.
எனவே, Lille வீரர் Ayyoub Bouaddiயை 81 மில்லியன் பவுண்டுக்கும் அதிகமான விலையில் வாங்க ஒப்புக்கொண்டாலும், அணி நிர்வாகம் Fernandez-ஐ வலைத்துப் போடவே அடிப்போடுகிறது.
இதற்கிடையில், அந்த அர்ஜெண்டினா ஆட்டநாயகனுக்கு, The Blues 120 மில்லியன் பவுண்ட் கேட்கிறதாம்.
Chelsea விலையைக் குறைத்தால், ஏதோ சிட்டி Fernandez-ஐ வாங்கும் வாய்ப்பு உள்ளது.
--
இந்தோனேசியாவில் அண்மையில் நிறைவடைந்த ஸ்ரீகண்டி மெர்டேகா கிண்ண 16 வயதுக்குட்பட்டோர் மகளிர் கால்பந்தாட்டத்தில், தேசிய வீராங்கனை லிம் யூ அதிக கோல் அடித்தவராக முடிசூட்டப்பட்டுள்ளார்.
14 வயதான அவர், அத்தொடர் முழுவதும் தேசிய அணிக்காக எட்டு முறை கோல் அடித்துள்ளார்.
அதில், சவுதி அரேபியாவை 9-0 என வீழ்த்திய குழுநிலை ஆட்டத்தில் அடித்த ஏழு கோல்களும் அடங்கும்.
--
1986 ஆம் ஆண்டு கால்பந்து திருவிழாவில் Argentina, England-ஐ 2-1 என வீழ்த்திய போது பயன்படுத்தப்பட்ட பந்து ஏலம் விடப்பட்டுள்ளது.
அவ்வாட்டத்தில் காலஞ்சென்ற கால்பந்து ஜாம்பவான் Diego Maradona தனது பிரபலமான “Hand of God” கோலை அடித்தது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பந்து தற்போது 3.3 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான விலைக்கு ஏலம் போயுள்ளது.
--