Skip to main content

Advertisement

EPL பட்டத்தை வெல்லும் நம்பிக்கையில் City !

 

பிரிமியர் லீக் பட்டத்தை வெல்லும் நம்பிக்கையை, தாம் இன்னும் இழக்கவில்லை என Manchester City நிர்வாகி Pep Guardiola கூறுகிறார் !

இரு புள்ளிகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தாலும், எப்படியாவது ஆர்செனலை முந்தி, பட்டத்தை வெல்வோம் ; ஆனால் அதற்கு முதலில் சிட்டி, எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும்.

அதே சமயம், ஆர்செனலும் புள்ளிகளை தவறவிட வேண்டும் என்பதை, தாம் உணர்ந்திருப்பதாக அவர் சொன்னார்.

எது எப்படியிருந்தாலும், கடைசி ஆட்டம் வரை தங்களின் போராட்டம் தொடரும், என்றாரவர்.

இன்று, Crystal Palace-சுக்கு எதிரான ஆட்டத்தில், 3-0 என சிட்டி வெற்றிப் பெற்றதை அடுத்து, அவர் அவ்வாறு கூறினார்.

சிட்டிக்கு இந்த கவலை இருக்க, ஆர்செனலோ கடைசி ஈராட்டங்களில் வெற்றி பெற்றாலே கிண்ணத்தை தூக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

---------

இதனிடையே, 100 கோலடிக்க உதவிகளை எட்டி, City நட்சத்திரம் Phil Foden, பிரிமியர் லீக்கில் City-யின் வரலாற்று வீரர்களின் பட்டியலில் இணைந்ததில் பெருமை கொண்டுள்ளார் !

Crystal Palace-சுக்கு எதிராக 3-0 என சிட்டி வெற்றிப் பெற்ற ஆட்டத்தில்,  Foden இரண்டு முறை கோலடிக்க உதவினார்.

---------

Brazil தேசிய காற்பந்து அணி பயிற்றுநர் Carlo Ancelotti, Neymar-ரை உலகக் கிண்ணத்துக்கான அணியில் சேர்ப்பதில், சிக்கலை எதிர்நோக்கியுள்ளார் !

Neymar-ரின் உடற்தகுதியில் பிரச்சனை இருப்பதே அதற்குக் காரணம்.

--------

தாய்லாந்து பொது பூப்பந்து போட்டியில், தேசிய ஆடவர் இரட்டையர் Goh Sze Fei-Nur Izzuddin, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் !

அவர்கள் இரண்டாவது சுற்றில், சீன இணையை வீழ்த்தினர்.

RAAGA Aaha Siranta Isai!