
அக்டோபர் 2 முதல் 4-ஆம் தேதி வரை, Selangor செப்பாங்கில் நடைபெறவுள்ள, Bahrain Grand Prix, Formula One பந்தயத்துக்கான டிக்கெட் விலைகள், அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது !
இந்த போட்டிக்கான டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், செப்பாங் சர்வதேச சுற்றுப்பந்தயத் தளத்துக்கு இல்லை என, அதன் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.
தற்போது Bahrain தரப்புடன் இணைந்து, டிக்கெட் விலைகள் தொடர்பில் தமது தரப்பு பணியாற்றி வருவதாக அவர் சொன்னார்.
இப்பருவ F1 பந்தயத்தின் நேரடி ஒளிப்பரப்பை, Astro-வில், BeIN விளையாட்டு அலைவரிசை 820-தில் கண்டு களிக்கலாம்.
-----------
தைவான் பொது பூப்பந்து போட்டியில், தேசிய ஆடவர் ஒற்றையர் Cheam June Wei, தகுதிச் சுற்று ஆட்டத்தோடு தனது பயணத்தை முடித்துக்கொண்டுள்ளார் !
அவர், உபசரணை நாட்டு வீரரிடம் வீழ்ந்தார்.
அதே வேளை, கலப்பு இரட்டையர் Chen Tang Jie - Clarissa San, முதல் சுற்றில் விளையாடுகின்றனர்.
-----------
2026 Commonwealth விளையாட்டுப் போட்டியில், மலேசியாவின் Izzat Shameer மற்றும் மகளிர் இரட்டையர் அணி, Lawn Bowls விளையாட்டின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது !
மலேசியா, தற்போது 5 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில், 7-ஆவது இடத்தில் உள்ளது ; அவற்றில் 3 தங்கங்களாகும்.
2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை ,TV Okey அலைவரிசை 146, Sukan+ அலைவரிசை 806 ஆகியவற்றில் , Astro-வில் காணலாம்.
----------
அடுத்த பருவத்தில், கோல் காவலர்கள், போலியான காயம் ஏற்பட்டது போல் நடித்து, ஆட்டத்தை தாமதப்படுத்தும் தந்திரங்களை கட்டுப்படுத்தும் புதிய விதிமுறையை, English Premier League, சோதனை முறையில் அறிமுகப்படுத்தவுள்ளது !
கால்பந்து விதிமுறைகளை உருவாக்கும் அமைப்புகளின் ஒப்புதலைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கோல் காவலர், காயம் காரணமாக ஆட்டம் நிறுத்தப்படுவதை பயன்படுத்தி, ஆட்டத்தின் வேகத்தை குறைத்து எதிரணியின் ஆட்டத்தின் போக்கை பாதிக்கும் அணிகளின் யுத்திகளைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.
----------
Tottenham மத்தியதிடலாட்டக்காரர் James Maddison, தனது ஆட்ட முறைக்கு ஏற்ற வகையில், தாக்குதல் பாணியை விரும்பும் பயிற்றுநர் Roberto De Zerbi என பாராட்டியுள்ளார் !
அடுத்து நடைபெறவுள்ள மாற்றங்கள் குறித்து, தாம் மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.
இவ்வாண்டில் பிரீமியர் லீக் ஆட்டங்களில் வெற்றியின்றி தடுமாறிய Tottenham-மின் இடைக்கால பயிற்றுநர் Igor Tudor பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, De Zerbi, மார்ச் மாதத்தில், புதிய பயிற்றுநராக பொறுப்பேற்றார்.