
தாம் Manchester City-யை விட்டு வெளியேறுவதை நிராகரிக்கவில்லை என Pep Guardiola தெரிவித்துள்ளார் !
எந்த முடிவையும் எடுக்கும் முன், முதலில் சிட்டியின் தலைவர், வீரர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியிருப்பதாகக் அவர் கூறினார்.
தனது எதிர்காலம் குறித்த எந்தவொரு அறிவிப்பும், இந்த பருவம் முடிந்த பிறகே வெளியிடப்படும், என்றாரவர்.
இன்று அதிகாலையில், Bournemouth-துடனான பிரிமியர் லீக் ஆட்டத்தில், சிட்டி 1-1 என சமநிலை கண்டு, லீக் கிண்ணத்தைத் தவறவிட்டதை அடுத்து, அவர் அதனை கூறினார்.
அவ்வாட்டம் சமநிலையில் முடிந்ததால், Arsenal-லுடனான புள்ளி வித்தியாசத்தை சிட்டி, நான்காக வைத்துள்ளது.
அதனால், என்னதான் சிட்டிக்கும், Arsenal-லுக்கும், இன்னும் ஒரு லீக் ஆட்டம் எஞ்சியிருந்தாலும், புள்ளி வித்தியாசத்தில் Gunners-சுக்கு வெற்றிப் பட்டம் சொந்தமாகிவிட்டது.
---------
நாளை அதிகாலை யுரோப்பா லீக் இறுதியாட்டம் நடைபெறவுள்ளது !
அவ்வாட்டத்தில், Aston Villa-வும், Freiburg-க்கும் நேருக்கு நேர் மோதுகின்றன.
அதனை, அதிகாலை 3 மணிக்கு மேல், Astro அலைவரிசை 820 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.
----------
மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில், இன்று சில தேசிய வீர்ரகள் முதல் சுற்றில் விளையாடுகின்றனர் !
அவர்களில், கலப்பு இரட்டையர் Chen Tang Jie - Toh Ee Wei, ஆடவர் ஒற்றையர் Justin Hoh ஆகியோரும் அடங்குவர்.
---------
உலகக் கிண்ண Sepak Takraw போட்டியில், வெற்றி வாகை சூடிய தேசிய Quadrant அணிக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் !
இந்த வெற்றி, மலேசியாவை உலக அரங்கில் உயர்த்தியதோடு, தேசிய வீரர்கள், மன உறுதி, ஒருமித்த நோக்கம், மற்றும் அனைத்துலக அளவில் போட்டியிட்டு வெற்றி பெறும் திறன் கொண்டவர்கள் என்பதை நிரூபித்துள்ளது, என்றாரவர்.