Skip to main content

Advertisement

இங்கிலாந்து, 2 வீரர்களை இழந்து தவிக்கலாம் !

 

Panama-வுக்கு எதிரான காற்பந்து திருவிழாவின் குழு நிலையிலான ஆட்டத்தில், இங்கிலாந்தின் Reece James-சும், Declan Rice-சும் களமிறங்குவது சந்தேகமே !

அவர்கள் காயப் பிரச்சனையில் இருப்பதே அதற்குக் காரணம்.

மற்றொரு பக்கம், இங்கிலாந்து பயிற்றுநரோ, காயத்திலிருந்து மீண்டு வரும் Bukayo Saka-வை மட்டுமே, நம்பியிருக்க முடியாது, என்கிறார்.

Saka, ஒரு முக்கிய வீரர் தான், ஆனால் அவரால் மட்டும் தாக்குதல் அரணில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்க்க முடியாது, என்றாரவர்.

இவ்வேளையில், இன்று காலை நடந்து முடிந்த ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்கா, தென் கொரியாவை 1-0 என வீழ்த்தியது.

Bosnia, முதன் முறையாக Knock out சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

---------

Manchester United-டின் Bruno Fernandes-சை வளைத்துப்போட அடிபோட்டு வரும் சவுதி அரேபிய கிளப்புகளுக்கு, ஏமாற்றமே மிஞ்சலாம் !

அவர், யுனைடட்டிலேயே இருக்கப்போவதாக, தனது நெருக்கமானவர்களிடம் சூசகமாகக் கூறியிருப்பதாகக் கூறப்படுவதே அதற்குக் காரணம்.

முன்னதாக, யுனைடட்டுடனான ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பே, தாம் யுனைடட்டை விட்டு வெளியேறலாம் என அந்த கேப்டன் அறிவித்திருந்தார்.

அவரின் நடப்பு ஒப்பந்தம் அடுத்தாண்டோடு முடிவடைகிறது.

எனினும், அவரின் ஒப்பந்தம் இன்னும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

--------

அமெரிக்க பொது பூப்பந்து போட்டியில், இரண்டு தேசிய பிரதிநிதிகள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் !

அவர்களில், தேசிய ஆடவர் ஒற்றையர் Lee Zii Jia-வும் அடங்குவார்.

அடுத்த சுற்றில் அவர், இந்திய வீரரைச் சந்திக்கின்றார்.

RAAGA Aaha Siranta Isai!