
புதிய நிர்வாகி Mauricio Pochettinoவின் கீழ் இன்னமும் வெற்றிக்குப் போராடி வருகிறது Man United!
அதிகாலை Sporting Lisbonநைச் சந்தித்த Champions லீக் ஆட்டத்தில் United 2-2 என சமநிலை மட்டுமே கண்டது.
மற்ற ஆட்டங்களில்
Liverpool, Bruggeவை 3-0 என வென்றது.
PSGயும் ரோமாவும் 2-2 என சமநிலை கண்டன.
Fenerbahce, Shaktar Donestkகை 1-0 என தோற்கடித்தது.
Inter Milan 2-0 என Stuttgardடை வென்ற வேளை,
Ateltico Madrid 2-0 என Vikingகைத் தோற்கடித்தது.
Bayern Munich, Lilleலிடம் 1-2 என வீழ்ந்தது.
Barcelona, Sabahவை 4-1 என வென்றது.
------
Nitrous Oxide எனப்படும் ஒரு வகை போதை பொருளை சுவாசித்த படி அபாயகரமான முறையில் வாகனமோட்டியதை ஒப்புக் கொண்டதை அடுத்து, இங்கிலாந்து, Man City மற்றும் Liverpool முன்னாள் ஆட்டக்காரர் Raheem Sterlingகிற்கு ஓராண்டு காலம் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!
அதாவது அத்தண்டனையின் கீழ், மீண்டும் ஒருமுறை அவர் குற்றம் இழைத்தது நிரூபிக்கப்பட்டால், அவரது சிறைத்தண்டனை உடனடி அமுலுக்கு வரும்.
-------
இந்தியாவில் நடைபெறும் ஆசிய Champions லீக் ஹாக்கி போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது தேசிய மகளிர் ஹாக்கி அணி!
தாய்லாந்துக்கு எதிரான கடைசி குழு நிலை ஆட்டத்தை தேசிய ஆணி 4-0 என வெற்றியுடன் முடித்திருப்பதே அதற்குக் காரணம்.
இன்றைய ஆட்டத்தில் Speedy Tigress உபசரணை அணி அல்லது ஜப்பானைச் சந்திக்கும்.
-----
இதனிடையே Sultan Azlan Shah கிண்ண ஹாக்கி போட்டியில் மலேசிய ஹாக்கி அணி இன்று பாக்கிஸ்தானைச் சந்திக்கவுள்ளது!
அவ்வாட்டத்தின் நேரடி ஒளிபரப்பை இரவு ஏழு மணி தொடங்கி, Stadiumastro அலைவரிசை 802 மற்றும் சூக்காவில் காணலாம்.