
Commonwealth விளையாட்டுப் போட்டியின் உள்ளரங்கு சைக்கிளோட்ட விளையாட்டில், தேசிய நட்சத்திரம் Azizulhasni Awang களமிறங்குகின்றார் !
அவர், ஆடவர் Keirin பிரிவின் தகுதிச் சுற்றில் விளையாடுகிறார்.
Nurul Izzah Izzati Asri , Nur Alyssa Farid ஆகியோர், மகளிருக்கான Sprint பிரிவில், விளையாடுகின்றனர்.
இவ்வேளையில், பதக்கப் பட்டியலில் மலேசியா, 6 தங்கங்களுடன், 7-ஆவது இடத்தில் உள்ளது.
2026 Commonwealth விளையாட்டுப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை, TV Okey அலைவரிசை 146, Sukan+ அலைவரிசை 806 ஆகியவற்றில், Astro-வில் காணலாம்.
---------
அடுத்த மாதம் புதுடெல்லியில் நடைபெறவுள்ள உலகப் பூப்பந்து போட்டிக்கு, தேசிய வீரர்கள் நல்ல நிலையில் உள்ளனர் !
குறிப்பாக Leong Jun Hao நன்கு உடற்தகுதி கொண்டிருப்பதாக, ஒற்றையர் வீரர்களுக்கான பயிற்சி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
உலகத் தரவரிசையில் 28-ஆவது இடத்தில் உள்ள Jun Hao, இவ்வாண்டு இதுவரை உலக அளவிலான எந்தவொரு பூப்பந்து போட்டியிலும், காலிறுதிக்கு முன்னேறவில்லை.
என்றாலும், கடந்த இரு வாரங்களில் நடைபெற்ற ஜப்பான் மற்றும் சீன பொது பூப்பந்து போட்டிகளில், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய Jun Hao, தனது ஆட்டத் திறனில் நல்ல முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
--------
தைவான் பொது பூப்பந்து போட்டியில், இன்று, தேசிய ஆடவர் இரட்டையர் Aaron Chia - Aaron Tai காலிறுதியில் விளையாடுகின்றனர் !
அவர்கள் உபசரணை நாட்டு இணையை எதிர்கொள்கின்றனர்.
----------
MLS அணியான Inter Miami-யில் இணைந்துள்ள புதிய பிரேசில் வீரர் Casemiro, தன்னிடம் இன்னும் வெற்றியை நோக்கிய ஆர்வமும் உந்துதலும் இருப்பதாக, அறிமுக நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார் !
அணி மாறிய பின்னருமே, வெற்றிகளைப் பெற வேண்டும் எனும் தனது வேட்கை குறையவில்லை என்றும் அவர் கூறினார்.