Skip to main content

Advertisement

இறுதி வாழ்த்து மழையில் பொழியும் Messi !

 

அனைத்துலக கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, Lionel Messi அறிவித்ததைத் தொடர்ந்து, அவரைப் பாராட்டி பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் !

Messi, கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்ததுமில்லாமல், கால்பந்து விளையாட்டையே மாற்றியமைத்தவர் எனக் கூறி, கால்பந்து அமைப்பின் தலைவர் Gianni Infantino பாராட்டியுள்ளார்.

Messi விளையாடும் Inter Miami-யின் இணை உரிமையாளர் David Beckham, திடலிலும் அதற்கு வெளியிலும், Messi-யின் தாக்கத்தைப் பாராட்டியுள்ளார்.

Messi-யின் அர்ஜென்டினா முன்னாள் அணி வீரர்கள், Jose Mourinho, அர்ஜென்டினா F1 ஓட்டுநர் Franco Colapinto உள்ளிட்டோரும், அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

----------

வீரர்களை வாங்கும் விற்கும் தவணை முடிவடைய, சில மணி நேரங்களே உள்ளன !

இந்நிலையில், சில பிரிமியர் லீக் அணிகள், கடைசி நேரத்தில் வீரர்களை ஒப்பந்தம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

அவற்றில், Arsenal, Atlético Madrid-டின் Julian Alvarez மற்றும் -வின் Malick Fofana ஆகியோரை ஒப்பந்தம் செய்ய உடன்பாடு எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

--------

சீன Masters பூப்பந்து போட்டியில், தேசிய ஆடவர் இரட்டையர் Tee Kai Wun - Yap Roy King, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் !

அதே வேளை, Goh Sze Fei - Nur Izzuddin, ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினர்.

ஆடவர் ஒற்றையர் Leong Jun Hao, தோல்வியடைந்தார்.

----------

2028 ஒலிம்பிக் போட்டிக்கான மலேசிய அணியில், தேசிய சைக்கிளோட்ட வீரர்  Datuk Azizulhasni Awang இடம்பெறுவது தாமதமாக உறுதி செய்யப்பட்டதற்கு, தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குறைபாடே காரணம் !

அதற்கான பொறுப்பை, இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

RAAGA Aaha Siranta Isai!