Skip to main content

Advertisement

Isak-கும், Gyökeres-சுக்கும் பாராட்டு !

 

2026 காற்பந்து திருவிழா பற்றிய சில செய்திகளைக் காண்போம் !

இன்று காலை நடைபெற்ற, குழு நிலையிலான ஆட்டத்தில், Sweden 5-1 என Tunisia-வை வீழ்த்தியது.

அவ்வாட்டத்தில், Alexander Isak-கும், Viktor Gyökeres-சும் இணைந்து வெளிப்படுத்திய சிறப்பான ஒத்துழைப்பு மிகுந்த ஆட்டத்தை, Sweden தலைமை பயிற்றுநர் Graham Potter பாராட்டியுள்ளார்.

அவர்களின் அச்செயலே, Tunisia-வின் தற்காப்பு அரணை அதர வைத்ததற்கு காரணமாகும் என அவர் சொன்னார்.

மற்றோர் ஆட்டத்தில், Ivory Coast 1-0 என Ecuador-ரை தோற்கடித்தது.

--------

Chelsea-யின் Marc Cucurella, Real Madrid-டில் இணையும் கட்டத்தை நெருங்கிவிட்டதாக, விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன !

அவரும், ரியாலுக்குச் செல்ல இணக்கம் தெரிவித்துள்ளாராம்.

--------

Everton-னின் Jarrad Branthwaite-டை வளைத்துப்போட, Manchester City அடிபோடுகின்றதாம் !

அணியில் இருந்து வெளியேறும் John Stones-சுக்கு பதிலாக Branthwaite-டை சிட்டி ஒப்பந்தம் செய்ய பார்ப்பதாகக் கூறப்படுகிறது.

-------

அண்மைய Nations கிண்ண ஹாக்கி போட்டியில், தேசிய அணி 1-4 என ஜப்பானிடம் வீழ்ந்ததை அடுத்து, உலக தரவரிசையில் ஓரிடம் குறைந்து, 15-ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது !

RAAGA Aaha Siranta Isai!