Skip to main content

Advertisement

இத்தாலிய FA தலைவர் பதவி விலகல் !

 

 

இத்தாலி தேசிய அணி உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறத் தவறியதைத் தொடர்ந்து, இத்தாலிய காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் அதிரடியாக பதவி விலகியுள்ளார் !

அவ்வணியுடன் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்த முன்னாள் கோல்காவலர் Gianluigi Buffon-னும் பதவி விலகியுள்ளார்.

இவ்வாரம் Bosnia-விடம் இத்தாலி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மூன்று உலகக் கிண்ணங்களில் தொடர்ச்சியாக பங்கேற்கத் தவறிய, முதல் முன்னாள் வெற்றியாளராக இத்தாலி மாறியுள்ளது.

----------

மற்றொரு பக்கம், போலாந்து தேசிய அணி, உலகக் கிண்ணத்துக்குத் தகுதி பெறத் தவறியதைத் தொடர்ந்து, அதன் மூத்த தாக்குதல் ஆட்டக்காரர் Robert Lewandowski, அவ்வணியை விட்டு வெளியேறலாம் என சூசகமாகக் கூறியுள்ளார் !

37 வயதான அவர், தேசிய அணிக்காக 165 ஆட்டங்களில் 89 கோல்கள் அடித்துள்ளார்.

---------

FIFA கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளதாக விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன !

உலகக் கிண்ண இறுதி ஆட்டத்துக்கான மிக விலையுயர்ந்த டிக்கெட்டுகள், ஒன்றுக்கு கிட்டத்தட்ட 11 ஆயிரம் அமெரிக்க டாலர் என விற்பனை செய்யப்படுவதே அதற்குக் காரணமாம.

கடந்த கத்தார் உலகக் கிண்ணத்தில், அதே வகை உயர்ந்த இருக்கை விலை, சுமார் 1,600 டாலராக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

----------

Tottenham, எவ்விதமான முடிவுகளைச் சந்தித்தாலும், தாம் கலங்கப்போவதில்லை என்கிறார், அதன் புதிய நிர்வாகி Roberto De Zerbi !

Spurs-சுடன் நீண்டகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, தனது வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய பொறுப்பாக என அவர் வர்ணித்தார்.  

RAAGA Aaha Siranta Isai!