Skip to main content

Advertisement

Joshua MU-வை விட்டு வெளியேறுகிறாரா ?

 

 

இப்பருவத்தில், Manchester United-டை விட்டு வெளியேறுவதாக எழுந்துள்ள வதந்திகள் குறித்து, Joshua Zirkzee விளக்கம் தெரிவித்துள்ளார் !

யுனைடட்டில் இருந்து வெளியேறி, மற்ற கிளப்புக்கு தாவும் எண்ணம் தற்போதைக்கு தமக்கு இல்லை என, அந்த தாக்குதல் ஆட்டக்காரர் கூறினார்.

அந்த டச்சு வீரர், அதிகமான விளையாட்டு நேரத்துக்காக போராடி வருகிறாராம்.

முந்தைய தலைமை பயிற்றுநர் இருக்கும் போதும் சரி, தற்போதைய இடைக்கால பயிற்றுநர் இருக்கும் போதும் சரி, அவருக்கு ஆட்டங்களில் களமிறங்கும் வாய்ப்புகள் குறைவாகவே இருந்துள்ளதாக, விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன.

---------

Manchester City-யில் John Stones-சின் நிலைமையை Everton கண்காணித்து வருகின்றதாம் !

சிட்டியுடனான அந்த மத்தியதிடலாட்டக்காரரின் ஒப்பந்தம் இப்பருவத்தோடு முடிவடைவதால், Everton அவரை வளைத்துப்போட பார்ப்பதாக, தகவல்கள் வெளிவந்துள்ளன.

--------

உலகக் கிண்ணத்துக்காக விளையாடப்போகும் இங்கிலாந்து தேசிய அணியில், Phil Foden இடம்பெறுவது சந்தேகம் தான் என்கிறார், அதன் பயிற்றுநர் Thomas Tuchel !

அந்த மத்தியதிடலாட்டக்காரர் பயிற்சியில் காட்டும் ஆட்டத்தரத்தை, திடலில் வெளிப்படுத்த சிரமம்படுவதே அதற்குக் காரணம் என Tuchel கூறினார்.

RAAGA Aaha Siranta Isai!