Skip to main content

Advertisement

காலிறுதியில் Hoo Pang Ron - Lai Pei Jing !

 

கொரிய பொது பூப்பந்து போட்டியில், தேசிய கலப்பு இரட்டையர் Hoo Pang Ron - Lai Pei Jing, காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர் !

ஆடவர் இரட்டையர் Man Wei Chong - Tee Kai Wun, தைவானிய இணையை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற்றனர்.

மகளிர் ஒற்றையர் K.லெட்ஷனா, 2-ஆவது சுற்றிலேயே தனது பயணத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

---------

Slavia Prague-குக்கு எதிரான Champions லீக் ஆட்டத்தில், Arsenal, கடுமையாக போராடி 2-1 என வெற்றி பெற்றதை அடுத்து, அவ்வணி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளதை, அதன் நிர்வாகி Mikel Arteta ஒப்புக்கொண்டுள்ளார் !

குறிப்பாக, பிற்பாதியாட்டத்தில், தனது வீரர்கள் கவனக்குறைவாக விளையாடி,  2-0 என்ற முன்னிலையையே இழக்கும் அபாயத்துக்குத் தள்ளப்பட்டதாக Arteta சொன்னார்.

----------

Unai Emery-க்கு புதிய ஒப்பந்தம் வழங்கவதற்கான தீவிர பேச்சுவார்த்தையில் உள்ளதாம் 
Aston Villa !

Manchester United உள்ளிட்ட நட்சத்திர கிளப்புகள், அவர் மீது ஆர்வம் காட்டி வருவதை அறிந்த Villa, அவரைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், உடனடியாகப் புதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.

RAAGA Aaha Siranta Isai!