Skip to main content

Advertisement

கிளப்பிடம் மன்னிப்புக் கேட்ட Martinez !

 

Manchester United வீரர் Lisandro Martinez, தனது நிர்வாகத்தைப் பகிரங்கமாக விமர்சித்ததற்காக, மன்னிப்புக் கோரியுள்ளார் !

நிர்வாகக் குழுவினரைச் சந்தித்த Martinez, அவர்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தியதாகக் கூறினார்.

முன்னதாக, Champions League ஆட்டத்தில், Atletico Madrid-டிடம் 0-2 என தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பெரிய பெரிய போட்டிகளில் போட்டியிட, United, அதிக முதலீடு செய்ய முன்வர வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

அந்தத் தோல்விக்குப் பிறகு ஏற்பட்ட விரக்தியில், அணியின் மோசமான தொடக்கத்துக்கு, நிர்வாகி Michael Carrick மட்டுமே பொறுப்பேற்க முடியாது என்றும், சிறந்த வீரர்களை ஒப்பந்தம் செய்ய கிளப் நிர்வாகமும், அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றும், Martinez விமர்சித்திருந்தார்.

அடுத்த Champions League ஆட்டத்தில், யுனைடட், Como-வைச் சந்திக்கும்.

---------

அடுத்தாண்டு ஜனவரியில், ஆசிய கிண்ண காற்பந்து போட்டி, சவூதி அரேபியாவில் அட்டவணையிட்டப்படி நடைபெறும் !

யேமனின் Houthi கிளர்ச்சியாளர்கள், சவூதி அரேபியா மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அப்போட்டி நடைபெறுமா  என்ற கவலை எழுந்துள்ள நிலையில், அந்த செய்தி வெளிவந்துள்ளது.

---------

டென்மார்க் பொது பூப்பந்து போட்டியின் காலிறுதியில், தேசிய மகளிர் இரட்டையர்  Pearly tan - M.Thinaah, இந்திய இணையுடன் மோதுகின்றனர் !

ஆடவர் இரட்டையர் Goh Sze Fei - Nur Izzuddin, சீன நாட்டு ஜோடியை எதிர்கொள்கின்றனர்.

டென்மார்க் பொது பூப்பந்து போட்டியின் காலிறுதிச் சுற்று ஆட்டங்களை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815-திலும், Sooka-விலும் நேரலையாகக் கண்டு களிக்கலாம்.

--------

எகிப்து பொது Squash போட்டியின் அரையிறுதியில், நடப்பு வெற்றியாளர் Hania El Hammamy-யிடம், தேசிய தாரகை S.சிவசங்கரி வீழ்ந்தார் !

RAAGA Aaha Siranta Isai!