
தேசிய பூப்பந்து கலப்பு இரட்டையர் அணியின் தலைமைப் பயிற்றுநர் Nova Widianto-வுக்கு மாற்றாக ஒருவர், அவசரமாக நியமிக்கப்படமாட்டார் !
மாறாக, இந்தப் பிரிவின் வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில், தகுதியும் தரமும் கொண்ட பயிற்றுநரைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தப்படும் என, மலேசிய பூப்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
பயிற்றுநர் தேர்வு பணிகள் மிகவும் கவனமாக மேற்கொள்ளப்படும் என்றும், இறுதி முடிவு எடுப்பதற்கு முன் BAM செயல்திறன் குழுத் தலைவருடன், மேலும் கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அச்சங்கம் கூறியது.
கடந்த மாத இறுதியில், Nova தனது பொறுப்பில் இருந்து விலகினார்.
---------
தைவான் பொது பூப்பந்து போட்டியில், 2 தேசிய பிரதிநிதிகள் இரண்டாம் நிலை வெற்றியாளராகியுள்ளனர் !
ஆடவர் இரட்டையர் Aaron Chia-Aaron Tai மற்றும், மகளிர் இரட்டையர் Pearly Tan-M Thinaah தான் அவர்களாவர்.
----------
Galatasaray-யின் Victor Osimhen-னை ஒப்பந்தம் செய்ய, Tottenham தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன !
தனது அணியை பெரிய அளவில் மறுசீரமைக்கும் திட்டத்தில், Tottenham, Osimhen-னை முக்கியமான இறுதி வீரராக அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.