
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், சிறப்பான ஆட்டத்துடன் போட்டியை நிறைவு செய்துள்ளது, தேசிய கராத்தே அணி !
சற்று முன்னர் நடந்த மகளிருக்கான 50 கிலோகிராமுக்குக் குறைவான குமித்தே பிரிவு இறுதியாட்டத்தில், ஷாமலராணி சந்திரன் தங்கம் வென்றார்.
அது குறித்த மகிழ்ச்சியை, ஜப்பானில் இருந்து Astro Audio செய்தி பிரிவிடம் பகிர்ந்துகொண்டுள்ளார், தேசிய கராத்தே தலைமை பயிற்றுநர் R. ஷர்மேந்திரன்.
தங்கப் பதக்க இலக்கையும் தாண்டி, கராத்தே அணி அப்போட்டியை சிறப்பாக முடித்ததாக அவர் கூறினார்.
கராத்தே, 2 தங்கங்களோடு சேர்த்து, 5 பதக்கங்களுடன், ஆசிய விளையாட்டை நிறைவுச் செய்தது.
இதையடுத்து, அப்போட்டியில் மலேசியாவின் பதக்க எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை Astro ARENA, Stadium Astro, ஐந்து பிரத்தியேக அலைவரிசைகள் மற்றும் Astro Go-வில் காணலாம்.
--------
Declan Rice-சுடனான ஒப்பந்தத்தை ஐந்தாண்டு காலத்துக்கு நீட்டிப்பதில், Arsenal நெருங்கிக்கொண்டிருக்கிறது !
புதிய ஒப்பந்தம் கைகூடினால், Rice-சுக்கு, வாரத்துக்கு சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பவுண்ட் சம்பளம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
Arsenal-லின் முக்கிய வீரர்கள் மற்றும் ஊழியர்களின் எதிர்காலத்தை உறுதிசெய்யும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, தலைமை பயிற்றுநர் Mikel Arteta புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, Rice-சுக்கான இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
---------
Aston Villa-வில் சோபிக்கத் தவறி வரும் Alejandro Garnacho-வை ஒப்பந்தம் செய்ய, சில ஸ்பெயின் கால்பந்து கிளப்புகள் ஆர்வம் காட்டி வருகின்றன !