Skip to main content

Advertisement

கடும் விமர்சனத்தில் Ronaldo !

 

 

2026 காற்பந்து திருவிழா குறித்த செய்திகளைக் காண்போம் !

அப்போட்டியில், புதிய வரலாறு படைக்கும் முயற்சியில் இருக்கும் Cristiano Ronaldo, தற்போது விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

France-சின் முன்னாள் நட்சத்திர வீரர் Thierry Henry, Portugal, Congo ஜனநாயகக் குடியரசுடன் 1-1 என சமநிலை கண்ட குழு நிலை ஆட்டத்தின்போது, அணியின் வெற்றியைவிட, தனிப்பட்ட கோல் சாதனைகளுக்கே Ronaldo அதிக முக்கியத்துவம் அளித்ததாக குறை கூறியுள்ளார்.

இந்த முடிவால், கிண்ணத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் போர்ச்சுகல், Knock-Out சுற்றுக்கான தகுதியைப் பெறும் போராட்டத்தில், கூடுதல் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.

எனினும், இன்றைய ஆட்டம் முடிந்த பின்னர் அதிகம் பேசப்பட்ட விஷயமாக இருந்தது, போர்ச்சுகலின் ஆட்டமோ, முடிவோ அல்ல; அந்த காற்பந்து ஜாம்பவானின் ஆட்டத்திறன் தான்.

---------

இதனிடையே, இன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில், Colombia 3-1 என, Uzbekistan-னை வீழ்த்தியது !  

Colombia-வுக்கான முதல் இரு கோல்களில் ஒன்று, Crystal Palace வீரர் Daniel Muñoz, மற்றொன்று Bayern Munich-கின் Luis Díaz போட்டதாகும்.

மற்றோர் ஆட்டத்தில், Ghana 1-0 என, Panama-வை தோற்கடித்தது.  

----------

லா லீக கிளப்பான Osasuna வீரர் Víctor Muñoz, Liverpool-லுடன் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன !

2032-ஆம் ஆண்டு வரையிலான ஒப்பந்தத்தில், Muñoz கையெழுத்திட்டாராம்.

---------

மக்காவ் பொது பூப்பந்து போட்டியில், தேசிய கலப்பு இரட்டையர் Hoo Pang Ron - Lai Pei Jing, காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர் !

அவர்கள், இரண்டாவது சுற்றில் தைவானிய ஜோடியை வீழ்த்தினர்.  

--------

தேசிய squash தாரகை S.சிவசங்கரி, PSA Squash தொடர் போட்டியில், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் ! 

RAAGA Aaha Siranta Isai!