
Kylian Mbappé, உலகக் கால்பந்து திருவிழா வரலாற்றிலேயே knockout சுற்றுகளில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் !
Sweden-னுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், France-சின் முதல் இரண்டு கோல்களும் அவர் போட்டவையாகும்.
இதன் வழி, அவர் தற்போது, knock out சுற்றுகளில் மட்டுமே 9 கோல்களைப் பதிவுச் செய்து, 8 கோல்களை அடித்திருந்த பிரேசிலிய சகாப்தம் Ronaldo-வின் சாதனையை முறியடித்துள்ளார்.
----------
இதனிடையே, Mbappe-வின் இன்றைய 2 கோல்களில் ஒன்றைப் போட உதவியவர், அவரின் சகா Ousmane Dembele ஆவார்.
இதையடுத்து, இம்முறை இவ்விருவரும் இணைந்து மட்டுமே 6 கோல்களைப் போட்டுள்ளனர் அல்லது போட உதவியுள்ளனர்.
----------
இன்று காலையில் நடைபெற்ற, கடைசி 32 அணிகளுக்கான ஆட்டத்தில், Mexico, 2-0 என Ecuador-ரை வீழ்த்தி, 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடைசி 16 அணிகளுக்கான சுற்றில் கால் பதித்தது.
--------
60 ஆண்டுகளாக பெரிய கிண்ண வெற்றிக்காக காத்திருப்பதால், தமதணி, Congo-வுடனான நாளைய ஆட்டத்தில், மிகுந்த கவனமுடன் விளையாட வேண்டும் என, இங்கிலாந்து பயிற்றுநர் Thomas Tuchel வலியுறுத்தியுள்ளார் !
--------
எகிப்து கேப்டன் Mohamed Salah, காயத்தில் இருந்து மீண்டு, அணி பயிற்சிக்குத் திரும்பியிருக்கின்றார் !
வார இறுதியில், ஆஸ்திரேலியாவுடனான, கடைசி 32 அணிகளுக்கான ஆட்டத்தில் அவர் களமிறங்க வாய்ப்புள்ளது.