
Burnley-க்கு எதிரான நாளைய பிரிமியர் லீக் ஆட்டத்தில், Arsenal சில முக்கிய வீரர்களை இழக்கலாம் !
Jurrien Timber, Mikel Merino மற்றும் Ben White தான் அவர்களாவர்.
அவர்கள் காயப் பிரச்சனையில் இருப்பதே அதற்குக் காரணம்.
அதே வேளை, Bukayo Saka, William Saliba மற்றும் கேப்டன் Martin Odegaard, அண்மைய பயிற்சியில் கலந்துகொள்ளவில்லையாம்.
என்றாலும், லீக் கிண்ணத்தை வெல்வதற்கு, நாளைய வெற்றி முக்கிய என்பதால், The Gunners, கடுமையாகப் போராடும் என்பது குறிப்பிடத்தக்கது.
புள்ளிப்பட்டியலில் 79 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் Gunners, நாளை வெற்றிப் பெற்றால், லீக் கிண்ணத்தை நெருங்கிவிடும்.
Arsenal - Burnley மோதும் ஆட்டத்தை, அதிகாலை 3 மணி தொடங்கி, Astro அலைவரிசை 811 மற்றும் Sooka-வில் நேரலையாக காணலாம்.
--------
Manchester United-டில், Luke Shaw முக்கியமான வீரராகத் தான் இருந்து வருகிறார் !
என்னதான், அவருக்கு பல முறை முதலணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அவர் யுனைட்டுக்கு ஒரு முக்கிய வீரர் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என, இடைக்கால நிர்வாகி Michael Carrick சொன்னார்.
---------
பிரேசிலின் சாதனை கோல் வீரர் Neymar, கடுமையான காயங்களில் இருந்து மீண்டு வரும் காலத்தில், தன்னைச் சுற்றியிருந்த, பயங்கரமான விமர்சனங்களை தாங்க வேண்டியிருந்ததாகக் கூறியுள்ளார் !
தற்போது முழுமையாக உடற்தகுதி கொண்டிருப்பதை நிரூபிக்க தேவையான அனைத்தையும் தாம் செய்துவிட்டதாகவும், Carlo Ancelotti தலைமையிலான உலகக் கிண்ண அணியில் இடம் பெற, தாம் தகுதியானவர் என்றும், அவர் வலியுறுத்தினார்.
---------
KL Segambut தமிழ்ப்பள்ளியில், புதிய sprint உள்ளரங்கு, மாணவர்களின் தடகளத் திறமையை மேம்படுத்த உதவும் என, கூட்டரசு பிரதேச அமைச்சர் Hannah Yeoh தெரிவித்துள்ளார் !
அதைக் கட்டும் திட்டம், கடந்தாண்டு இறுதியில் தொடங்கப்பட்டு, கடந்த மாத மத்தியில் நிறைவடைந்தது.