
2026 காற்பந்து திருவிழா குறித்த செய்திகளைக் காண்போம் !
இன்று காலை நடைபெற்ற குழு நிலையிலான ஆட்டத்தில், Argentina 3 - 0 என Algeria-வை வீழ்த்தியது !
Argentina-வின் Lionel Messi, Hatrick கோல்களைப் போட்டு ஆட்ட நாயகனானார்.
ஆட்டம் ஆரம்பித்து 17-ழே நிமிடத்தில், அந்த காற்பந்து ஜாம்பவான் Messi, ஒரு கோலை போட்டதுடன், அடுத்தடுத்து மேலும் இரு கோல்களையும் போட்டு அசத்தினார்.
இதையடுத்து, மெஸ்ஸி தனது 16-வது கோலை அடித்து, காற்பந்து திருவிழாவில், அதிக கோலடித்த ஆட்டக்காரருக்கான சாதனையை, Messi சமப்படுத்தியுள்ளார்.
இந்நாள் வரை ஆக அதிகமாக 16 கோல்களை அடித்து, ஜெர்மனியின் Miroslav Klose, அந்த சாதனையை வைத்திருந்தார்.
ஆறு காற்பந்து திருவிழாக்களில் விளையாடிய முதல் வீரராகவும் Messi திகழ்கிறார்.
மற்ற ஆட்டங்களில், France 3-1 என Senegal-லை வீழ்த்தியது.
France-சுக்கான அந்த மூன்று கோல்களில் இரண்டை, Kylian Mbappe போட்டு அசத்தினார்.
எனவே, அவரும் அந்த அதிக கோலடித்தவருக்கான பட்டியலில் 3-ஆவது இடத்துக்கு ஏறியுள்ளார்.
இன்னொரு கோலை, Bradley Barcola போட்டார்.
மற்றோர் ஆட்டத்தில், Norway 4-1 என Iraq-கை தோற்கடித்தது.
Norway-யின் முதல் இரண்டு கோல்களும், Manchester City-யில் விளையாடும் தாக்குதல் ஆட்டக்காரர் Erling Haaland அடித்தார்.
----------
இதனிடையே, Cristiano Ronaldo தலைமையிலான போர்ச்சுகலுக்கு எதிராக தமதணி கடும் போட்டிக்கொடுக்க தயாராக இருப்பதாக, Congo பயிற்றுநர் சவால் விடுத்துள்ளார் !
Congo, 52 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன் முறையாக இப்போட்டியில் விளையாடுகிறது.
என்றாலும், Congo அச்சமின்றி களம் காணும், என்றாரவர்.
நாளை அதிகாலை 1 மணிக்கு, அவ்விரு அணிகளும் மோதுகின்றன.
--------
மக்காவ் பொது பூப்பந்து போட்டியில், இரண்டு தேசிய பிரதிநிதிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன !
கலப்பு இரட்டையர் Hoo Pang Ron - Lai Pei Jing மற்றும் Wong Tien Ci, Lim Chiew Sien தான் அவர்களாவர்.
ஆடவர் ஒற்றையர் Lee Zii Jia-வும், இன்று முதல் சுற்றில் களம் காணும் தேசிய வீரர்களில் ஒருவராவார்.