Skip to main content

Advertisement

Liverpool-லுக்கு விரைவில் நற்செய்தி கிட்டலாம் !

 

Mohamed Salah, இப்பருவத்தோடு அணியை விட்டு வெளியேறுவதால், தாக்குதல் அரணை பலப்படுத்த நினைக்கும்  Liverpool-லுக்கு விரைவில் நற்செய்தி கிட்டலாம் !

Bundesliga கிளப்பான RB Leipzig-கின் Yan Diomande, Liverpool அல்லது Manchester City-யில் சேரலாம் என விளையாட்டு வட்டாரங்கள் கூறி வருவதே அதற்குக் காரணம்.

ஆனால், அவரை ஒப்பந்தம் செய்யக் கோரி வரும் கிளப், 100 மில்லியன் பவுண்ட் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.

----------

West Ham நட்சத்திரம் Mateus Fernandes, Arsenal-லின் Declan Rice-சுக்கு இணையாக விளையாடக்கூடிய திறமை கொண்டவர் என Manchester United கருதுகின்றதாம் !

மத்தியதிடலை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வரும் United, Fernandes-சை ஒப்பந்தம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

---------

Real Sociedad தற்காப்பு ஆட்டக்காரர் Jon Martin-னை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும்படி,  Aston Villa-வுக்கு Unai Emery தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன !

--------

ஆஸ்திரேலிய பொது பூப்பந்து போட்டியில், தேசிய கலப்பு இரட்டையர் Hoo Pang Ron - Lai Pei Jing, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ள வேளை, ஆடவர் ஒற்றையர் Lee Zii Jia, முதல் சுற்றில் தோல்வியடைந்தார் !

RAAGA Aaha Siranta Isai!