Man யுனைடெட் தலைமைப் பயிற்றுநர் Michael Carrick மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார் !
இன்று அதிகாலை நடைப்பெற்ற பிரீமியர் லீக் ஆட்டத்தில், தட்டு தடுமாறி கிடக்கும் Tottenham-மோடு, யுனைடெட் 1-1 என சமநிலை கண்டிருப்பதே அதற்கு காரணம்.
73-ஆவது நிமிடத்தில் தாக்குதல் வீரர் Bryan Mbeumo யுனைடெட்டுக்கான முதல் கோலைப் போட்டார்.
78-ஆவது நிமிடத்தில், Tottenham வீரர் Rodrigo Bentancur-க்குச் சிவப்பு அட்டை வழங்கப்பட்டு வெளியேறினார்.
யுனைடெட் வெற்றி பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில Dominic Solanke Tottenham -முக்கான ஒரு கோலைப் போட்டு ஆட்டத்தைச் சமநிலைச் செய்தார்.
அம்முடிவால், யுனைடெட் தொடர்ந்து நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற முடியாமல், புள்ளிப் பட்டியலில் 12-ஆவது இடத்தில் உள்ளது, Spurs-ஓ 18-ஆவது இடத்தில் இருக்கிறது.
--
பிரீமியர் லீக்கின் மற்ற ஆட்ட முடிவுகள்
நடப்புச் சாம்பியனான Arsenal, Leeds ஐ 2-1 என வீழ்த்தியது.
Chelsea, Bournemouth ஐ 5-1 என பந்தாடியது.
Ipswich, Fulhamமை 2-1 என தோற்கடித்தது.
ஆஸ்டன் வில்லா , Brentford உடனான ஆட்டம் 2-2 என சமநிலையில் முடிந்தது.
இதனிடையே, இன்றிரவு லிவர்பூல் தனது சொந்த அரங்கில் Man சிட்டியை எதிர்கொள்கிறது.
லிவர்பூல் Man சிட்டி மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிப்பரப்பை இரவு மணி 11.30 தொடங்கி ஆஸ்ட்ரோ அலைவரிசை 811 மற்றும் சூக்காவில் காணலாம்.
--
சிங்கப்பூரில் நடைப்பெறும், F1 GP பந்தயத் தகுதிச் சுற்றில், ரெட் புல் ஓட்டுநர் Max Verstappen வெற்றி பெற்று, 50-வது முறையாக தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்துள்ளார்.
Charles Leclec மற்றும் Lewis Hamilton அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.
--
Finland-ல் நடைபெறும் Arctic பொது பூப்பந்து போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் தேசிய வீரர்கள் Aaron Tai-Yap Roy King இணை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அதேவேளை, ஆடவர் ஒற்றையர் வீரர் Lee Zii Jia அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியுற்று வெளியேறினார்.
Arctic பொது பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிப்பரப்பை மாலை மணி 4 தொடங்கி ASTRO அலைவரிசை 815 மற்றும் சூக்காவில் காணலாம்.