
Everton-னுக்கு எதிரான நாளைய பிரிமியர் லீக் ஆட்டத்தில், Manchester City சில முக்கிய வீரர்களை இழக்கும் !
Ruben Dias, Josko Gvardiol ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.
அவர்களுக்கு அடிபட்டிருப்பதே அதற்குக் காரணம்.
Rodri-யும் நாளை விளையாடுவது சந்தேகமாகவே இருந்து வருகிறது.
காயத்தால், அவர் அணி பயிற்சியில் கலந்து கொள்ளாமல் போனதால், அந்த சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 5 ஆட்டங்களில் தோல்வி காணா நிலையை தக்கவைத்து வந்த சிட்டி, புள்ளிப்பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருக்கும் Manchester United-டை விட, 6 புள்ளிகளைக் கூடுதலாகக் கொண்டு இரண்டாவது இடத்தில் உள்ளது.
Everton - Manchester City மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, அதிகாலை 3 மணி தொடங்கி, Astro அலைவரிசை 811-றிலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.
----------
இதனிடையே, Chelsea - Nottingham Forest, நேருக்கு நேர் மோதுகின்றன !
அவ்வாட்டத்தை, Astro அலைவரிசை 811 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.
-----------
Manchester United-டுக்காக தாம் எப்போதும் இயன்றதை செய்வேன் என, மத்தியதிடலாட்டக்காரர் Kobbie Mainoo தெரிவித்துள்ளார் !
இந்த கிளப்பில் விளையாடுவது தனக்கு ஓர் ஆசிர்வாதம் எனவும் அவர் வர்ணித்தார்.
நேற்றிரவு பிரிமியர் லீக் ஆட்டத்தில், United, 3-2 என Liverpool-லை தோற்கடித்து வென்றதற்கு, Mainoo-வின் 77-ஆவது நிமிட கோலே காரணம்.