Skip to main content

Advertisement

Martinez தன்னை தற்காத்தார் !

 

Manchester United நிர்வாகத்தை விமர்சித்த தனது கருத்துகளை, Lisandro Martinez நியாயப்படுத்தி பேசியுள்ளார் !

Atletico Madrid-டுக்கு எதிரான நேற்றைய Champions லீக் ஆட்டத்தில் யுனைடட் 0-2 என தோல்வி கண்டதை அடுத்து, அணி நிர்வாகம் மீதான தனது ஆதங்கத்தை Martinez வெளிப்படுத்தினார்.

அணிக்கு அதிக முதலீடு செய்து, முக்கியக் கிண்ணங்களைக் கைப்பற்றும் அளவுக்கு, அணியை வலுப்படுத்த வேண்டும் என்பதே, தமது நோக்கம் என Martinez கூறினார்.

நேற்றைய தோல்விக்குப் பிறகு ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே அவ்வாறு பேசியதாக ஒப்புக்கொண்ட அவர், அதற்காக மன்னிப்புக் கேட்கவில்லை.

அதே வேளை, அணியின் ஆட்டத்திறனை மேம்படுத்துவதில் வீரர்களுக்கும் பொறுப்பு இருப்பதாக அந்தத் தற்காப்பு ஆட்டக்காரர் வலியுறுத்தினார்.

ஆட்டக்காரர்களை வாங்கும் விற்கும் தவணையில், அணிக்குத் தேவையான வீரர்களை ஒப்பந்தம் செய்வதில், அணி நிர்வாகம் போதிய முதலீடு செய்யாத நிலையில், அணியின் மோசமான தொடக்கத்துக்கு, தலைமை பயிற்றுநர் Michael Carrick மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறுவது தவறு என, Martinez முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.

---------

Real Madrid வீரர் Vinicius Junior-ருக்கு நான்கு ஆட்டங்களில் விளையாடத் தடை விதிக்கப்பட்டதை, ஸ்பெயின் கால்பந்து அதிகாரிகளின் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என, ரியால் ந்ரிவாகி Jose Mourinho விமர்சித்துள்ளார் !

இன்றைய முக்கியமான Roma-வுக்கு எதிரான Champions லீக் ஆட்டம் ஆரம்பிக்க இரண்டே மணி நேரங்கள் எஞ்சியிருந்த நிலையில், இந்தத் தடை அறிவிக்கப்பட்டது, அணியின் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளைப் பாதித்ததாக Mourinho சாடினார்.

இதனால், Barcelona-வுக்கு எதிரான லா லீகா உட்பட முக்கியமான ஆட்டங்களில் Vinicius பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

---------

டென்மார்க் பொது பூப்பந்து போட்டியில், சில தேசிய பிரதிநிதிகள் இன்று 2-ஆம் சுற்றில் விளையாடுகின்றனர் !

மகளிர் இரட்டையர் Pearly Tan - M.Thinaah-வும் அவர்களில் அடங்குவர்.

டென்மார்க் பொது பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815-திலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.

RAAGA Aaha Siranta Isai!