Skip to main content

Advertisement

முயற்சி திருவினையாக்கும் ; ஷாமலா சொன்னார் !

 

கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றியை நழுவவிட்டாலும், முயற்சியைக் கைவிடாமல் பயிற்சி பெற்று வந்ததே, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிடைத்த  தங்கத்துக்குக் காரணம் என்கிறார், தேசிய கராத்தெ வீராங்கனை ஷாமலராணி சந்திரன் !

அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடிய ஷாமலா, தன்னை போன்று, மற்ற விளையாட்டு வீரர்களும், முயற்சியைக் கைவிடாமல், தொடர்ந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம், என்றார்.

மகளிருக்கான, 50 கிலோகிராமுக்குக் குறைவான குமித்தே பிரிவு இறுதியாட்டத்தில், ஷாமலாவுக்கு தங்கம் கிடைத்தைத் தொடர்ந்து, தேசிய கராத்தே தலைமை பயிற்றுநர் R. ஷர்மேந்திரன், மகிழ்ச்சி மழையில் திளைத்திருந்தார்.

அது, ஷாமலாவின் உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் என, ஷர்மேந்திரன் வர்ணித்தார்.

ஷாமலாவுக்கு முன்னதாக, நாட்டுக்கும், கராத்தேவுக்கு முதல் தங்கத்தை ஈட்டித் தந்த Adeola Fay Robert, அல்லும் பகலும் இயந்திரம் போன்று கடுமையான பயிற்சிகளை மேற்கொள்பவர் எனவும் அவர் சொன்னார்.

அதே வேளை, ஆசிய விளையாட்டில் தங்கம் வெல்லும் கராத்தே வீரர்களுக்கு, கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது, தனது வீரர்களுக்கு இன்னும் ஊக்குவிப்பாக இருந்ததாக அவர் கூறினார்.

அப்போட்டி ஆரம்பித்து மறுநாளே   K.தேவேந்திரன், H.சூரியா ஆகியோர் தலா ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்ற வேளை, அடுத்தடுத்த நாட்களில், Adeola-வும், ஷாமலாவும் தலா ஒரு தங்கம் வென்றனர்.

இதையடுத்து,  2 தங்கம், 3 வெண்கலம் என 5 பதக்கங்களோடு, கராத்தே, அப்போட்டியை நிறைவுச் செய்தது.

----------

இதனிடையே, தேசிய sepak takraw ஆடவர் அணி, ரெகு பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது !

--------

Squash விளையாட்டில், மகளிர் ஒற்றையர் பிரிவில், இரண்டு தேசிய வீராங்கனைகளும், கலப்பு இரட்டையர் பிரிவில், இரண்டு ஜோடிகளும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர் !

ஆசிய விளையாட்டுப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை Astro ARENA, Stadium Astro, ஐந்து பிரத்தியேக அலைவரிசைகள் மற்றும் Astro Go-வில் காணலாம்.  
 

RAAGA Aaha Siranta Isai!