
Arsenal நிர்வாகி Mikel Arteta ஒரு மேதை என கூறுவதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்கிறார், அதன் தீவிர ரசிகர், குமரன் புதியநாதார் !
Arsenal-லை, கைவிடாமல் தொடர்ந்து போராட வைத்து, இறுதியில் EPL கிண்ணத்தை கைப்பற்றச் செய்த பெருமை முழுவதும் Arteta-வுக்கே சேரும் எனக் கூறிய குமரன், காயப் பிரச்சனை காலத்தில், அவர் சில யுக்திகளை திறம்பட மேற்கொண்டார், என்றார்.
இவ்வேளையில், ஜனவரியில் இருந்து காயத்தால் அவதியுற்று வந்த Mikel Merino, வார PSG-யுடனான Champions லீக் இறுதியாட்டத்தில் குறுகிய நேரத்துக்கு களமிறக்கப்படலாம் என Arteta கூறியது குறித்து, குமரனிடம் கேட்டப் போது, அவர் ஒரு சிறந்த வீரர், கோலடிக்ககூடியவர், அவரை இறக்கினால் வெற்றி வாய்ப்பு அதிகம் என சொன்னார்.
EPL வெற்றியைக் கொண்டாடுவதில் இருந்து கிடைக்கும் சக்தியைப் பயன்படுத்தி, Arsenal Champions லீக் இறுதியாட்டத்தில் சிறப்பாக விளையாடும் என, குமரன் நம்பிக்கை தெரிவித்தார்.
அதுவே Arsenal, Champions லீக் இறுதியாட்டத்தில் வென்றால், அதுவே, The Gunners-சின் முதல் Champions லீக் வெற்றியாகும்.
Arsenal கடைசியாக 2006-ஆம் ஆண்டில், Champions லீக் இறுதியாட்டத்தில் Barcelona-விடம் தோற்றுப்போனது.
-----------
சிங்கப்பூர் பொது பூப்பந்து போட்டியில், தேசிய கலப்பு இரட்டையர் Jimmy Wong-Cheng Su Yin, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் !
அவ்விணை, உலக முதல் நிலை சீன நாட்டு ஜோடியை முதல் சுற்றில் தோற்கடித்தனர்.
Jimmy Wong-Cheng Su Yin, இன்னும் உலக தரவரிசை பெறாத புதிய ஜோடி என்றாலும், தன்னம்பிக்கையுடனும் அமைதியுடனும் விளையாடி, கடந்தாண்டு உலகத் தொடர் இறுதிப் போட்டியின் வெற்றியாளர்களான அந்த ஜோடியை வெளியேற்றினர்.
அடுத்த சுற்றில், தேசிய ஜோடி, இந்திய இணை அல்லது தைவானிய இனையச் சந்திப்பர்.
--------
விடுவிப்பு விதி இருந்தபோதிலும், Bruno Fernandes-சைத் தக்கவைத்துக் கொள்வது குறித்து, Manchester United பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாம் !
அந்த கேப்டனுக்கு, அதிக சம்பளத்துடன் கூடிய புதிய ஒப்பந்தம் கொடுத்து யுனைடட்டிலேயே வைத்திருக்கலாம்.
இல்லையெனில், அவருக்கு, அங்கீகாரம் வழங்கும் வகையிலான ஒப்பந்தத்தை வழங்க, யுனைடெட் முனைப்புடன் செயல்படுவதாக, விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன.
---------
Tottenham, Manchester City-யின் Savinho-வை 60 மில்லியன் பவுண்ட் தொகையைக் கொடுத்து ஒப்பந்தம் செய்ய மீண்டும் முனைப்பு காட்டுவதாகத் தெரிகிறது !
சிட்டியில், முதல் அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் Savinho விரக்தியடைந்துள்ளாராம்.