
Aston Villa-வுக்கு எதிரான நாளைய பிரிமியர் லீக் ஆட்டத்தில், Liverpool-லின் Mohamed Salah களமிறங்கவுள்ளதை, நிர்வாகி Arne Slot உறுதிப்படுத்தியுள்ளார் !
அவர் காயப் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
Florian Wirtz-சும் நாளை திடலில் கால் பதிக்க வாய்ப்புள்ளதாக Slot சொன்னார்.
அவர் வயிறு சம்பந்தமான பிரச்சனையில் இருப்பதாக தெரிகிறது.
இதனிடையே, லிவர்பூல், எஞ்சியுள்ள ஈராட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும்.
குறிப்பாக Aston Villa-வுக்கு எதிரான ஆட்டம், அடுத்த பருவ Champions லீக்குக்கு தகுதி பெறுவதை தீர்மானிக்கும், முக்கியமான ஆட்டமாகும்.
ஐந்தாவது இடத்தில் இருக்கும் Villa-வும், 4-ஆவது இடத்தில் இருக்கும் Liverpool-லும், புள்ளிப்பட்டியலில் ஒரே புள்ளிகளைக் கொண்டிருக்கின்றன.
அவ்வணிகளுக்கிடையே, கோல் கணக்கு மட்டுமே வேறுபட்டிருக்கின்றது.
Aston Villa - Liverpool மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, அதிகாலை 3 மணி தொடங்கி, Astro அலைவரிசை 811-றிலும், Sooka-வில் கண்டு களிக்கலாம்.
--------
தற்போது அணியில்லாமல் இருக்கும் Xabi Alonso, Chelsea நிர்வாகியாகச் செல்லலாம் என, விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன !
Alonso-வும், பிரிமியர் லீக் அணியை நிர்வகிக்க ஆர்வம் காட்டுகின்றாராம்.
-----------
Real Madrid-டில், தாம் முன்னணி வீரர்களில் ஒருவராக கருதப்படவில்லை என Kylian Mbappe வேதனையாகக் கூறியுள்ளார் !
Real Oviedo-வுக்கு எதிரான இன்றைய லா லீகா ஆட்டத்தில், தாம் Real தொடக்க அணியில் சேர்க்கப்படாமல் போனதை அடுத்து, Mbappe வருத்தம் தெரிவித்தார்.
----------
தேசிய இளையோர் ஆடவர் ஹாக்கி அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இளையோருக்கான ஆசியக் ஹாக்கி கிண்ண போட்டி, முன்பு 21 வயதுக்கு கீழ் எனும் பிரிவில் நடத்தப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அது, 20 வயதுக்கு கீழ் எனும் பிரிவாக மாற்றப்பட்டதால், அணியின் முக்கியமான எட்டு வீரர்கள் தகுதி இழந்துள்ளதாக, பயிற்றுநர் தெரிவித்துள்ளார்.
--------
தாய்லாந்து பொது பூப்பந்து போட்டியில், தேசிய ஆடவர் இரட்டையர் Goh Sze Fei - Nur Izzuddin, Scotland இணையை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர் !
அப்போட்டியை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.
---------
ஜப்பான் டிராக் சைக்கிளோட்ட கிண்ண போட்டியில், தேசிய நட்சத்திரங்கள் Shah Firdaus Sahrom மற்றும் Azizulhasni Awang, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆடவருக்கான Keirin பிரிவு இறுதியாட்டத்தில், மூன்று சிறந்த இடங்களில் ஒன்றை பிடித்துள்ளனர் !