Skip to main content

Advertisement

MU மீது அதீத நம்பிக்கையில் Carrick !

 

Atlético Madrid-டுக்கு எதிரான நாளைய Champions League ஆட்டத்தில், Manchester United, தொடக்கத்திலிருந்தே வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் !

United தலைமை பயிற்றுநர் Michael Carrick அவ்வாறு கூறியுள்ளார்.

தற்போதைய சவால்களைக் கடந்து, யுனைடட் மீண்டு வரும் எனும் நம்பிக்கை தமக்கிருப்பதாகவும் Carrick சொன்னார்.

அதே சமயம், கேப்டன் Bruno Fernandes-சுக்கு ஆதரவு தெரிவித்த Carrick, நாளைய ஆட்டத்துக்கு United தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இப்பருவத்தில் Bruno-வின் ஆட்டத்தரம் குறைந்துள்ளதாக, விமர்சனங்கள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.

Atlético Madrid - Manchester United மோதும் ஆட்டத்தை, அதிகாலை 3 மணி தொடங்கி, Astro அலைவரிசை 820 மற்றும் Sooka-வில், நேரலையாகக் காண்லாம்.

--------

இதனிடையே, Arsenal, Lille-லுக்கு எதிராக நாளை களமிறங்குகிறது !

அவ்வாட்டத்தில், Piero Incapie (Incapiye) மற்றும் Martin Zubimendi விளையாடாமல் போக வாய்ப்புள்ளது.

கூடுதல் பயிற்சி நேரத்தின் போது, அவர்களுக்கு அடிபட்டதே அதற்குக் காரணம்.

ஆர்செனல் - Lille மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, அதிகாலை 3 மணி தொடங்கி, Astro அலைவரிசை 822-டிலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.

--------

டென்மார்க் பொது பூப்பந்து போட்டியில், ஆடவர் இரட்டையர் Aaron CHIA - Soh Wooi Yik, இன்று முதல் சுற்றில் களமிறங்குகின்றனர் !

அவர்கள், ஜப்பானிய இணையுடன் மோதுகின்றனர்.

மகளிர் ஒற்றையர் K.லெட்ஷனா, டென்மார்க் வீராங்கனையைச் சந்திக்கின்றார்.

RAAGA Aaha Siranta Isai!