மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில், ஒரு மலேசிய பிரதிநிதி, இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகியுள்ளது !
இரண்டு மலேசிய பிரதிநிதிகள், அரையிறுதிக்குத் தகுதி பெற்றதே அதற்குக் காரணம்.
Aaron Chia-Soh Wooi Yik மற்றும் Goh Sze Fei-Nur Izzuddin, இன்று அரையிறுதியில் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
அதோடு, Arif Junaidi - Yap Roy King, டென்மார்க் இணையை சந்திக்கின்றனர்.
மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் நேரடி ஒளிபரப்பை, Astro அலைவரிசை 815 மற்றும் Sooka-வில் கண்டு களிக்கலாம்.
---------
Manchester United-டில் Michael Carrick, நிரந்தரமாக வேண்டும் எனும் ரசிகர்களின் ஆவல், இப்போது நிறைவேறியுள்ளது !
Red Devils-சின், தலைமை பயிற்றுநராக அவர் ஈராண்டுகால ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளார்.
இப்பருவ மத்தியில் இடைக்கால நிர்வாகியாக பொறுப்பேற்ற அவர், யுனைடெட்டை சிறப்பான ஆட்டத்துடன் முன்னேற்றி, Champions லீக்குக்குத் தகுதி பெறச் செய்தது குறிப்பிடத்தக்கது.
---------
Everton-னுக்கு எதிரான நாளைய பிரிமியர் லீக்கில் ஆட்டத்தில், எந்தளவுக்கு போட்டியைக் கொடுக்க முடியுமோ, அந்தளவுக்கு போட்டிக் கொடுக்கும்படி, நிர்வாகி Roberto De Zerbi, Tottenham-மைக் கேட்டுக்கொண்டுள்ளார் !
அவ்வாட்டத்தில் Tottenham, சமநிலை கண்டாலே போதும் என அவர் சொன்னார்.
அது, பிரிமியர் லீக்கில் இருந்து வெளியேறும் அபாயத்தில் இருந்து காப்பாற்றும், என்றாரவர்.
---------
இப்பருவ இறுதியோடு Real Madrid-டை விட்டு வெளியேறுவதாக, அதன் பயிற்றுநர் Alvaro Arbeloa கூறியுள்ளார் !
கிண்ணமில்லா பருவமே அதற்குக் காரணமாம்.