Skip to main content

Advertisement

MU-வை நெருங்குகின்றார் Ederson !

 

Atalanta மத்தியதிடலாட்டக்காரர் Ederson-னை ஒப்பந்தம் செய்வதில், Manchester United இறுதி முடிவை எட்டியுள்ளதாம் !

45 மில்லியன் யூரோ தொகையிலான ஒப்பந்தம், இணக்கம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர் நான்காண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் ; மேலும் ஒரு வருடம் நீட்டிக்கும் வாய்ப்பும் அதில் உள்ளது.

----------

Lionel Messi, அனைத்துலக காற்பந்தில் இருந்து ஓய்வுப் பெறுவது குறித்த முடிவு, அவரது கையிலேயே உள்ளது என, Argentina பயிற்றுநர்  Lionel Scaloni தெரிவித்துள்ளார் !

அவர் இன்னும் உலகின் சிறந்த வீரர் என்ற நிலையைத் தக்க வைத்து வருவது மறுக்கவியலாது, என்றாரவர்.

அவர் 6-ஆவது முறையாக, 2026 காற்பந்து திருவிழாவில் விளையாடுகின்றார்.

---------

இந்தோனேசிய பொது பூப்பந்து போட்டியில், தேசிய கலப்பு இரட்டையர் Hoo Pang Ron - Lai Pei Jing, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் !

இன்று, முதல் சுற்றில், இரண்டு ஆடவர் இரட்டையர் ஜோடிகள், Arif Junaidi - Yap Roy King மற்றும் Aaron Chia - Soh Wooi Yik, நேருக்கு நேர் எதிர்கொள்கின்றனர்.  

இந்தோனேசிய பொது பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை, இப்போது, Astro அலைவரிசை 815-திலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம். 

RAAGA Aaha Siranta Isai!