
Manchester United-டின் கோல்காவலர் Senne Lammens-சுக்கு, தலைமைப் பயிற்றுநர் Mauricio Pochettino தொடர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளார் !
Sporting Lisbon-னுஎதிரான ஆட்டத்தில், அந்த கோல காவலரின் சில தவறுகளால் United வெற்றியைத் தவறவிட்டபோதும், கால்பந்தில், இதுபோன்ற தவறுகள் நிகழ்வது சகஜம் என Pochettino குறிப்பிட்டுள்ளார்.
தனது வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்களில், அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க தாம் தயார் என்றும் அவர் உறுதி பூண்டுள்ளார்.
---------
இந்தியாவில் நடைபெறும் பூப்பந்து போட்டியில், தேசிய கலப்பு இரட்டையர் Wee Yee Hern - Vannee GOBI, காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர் !
அவர்கள் 2-ஆம் சுற்றில், அப்போட்டியின் முதல் தேர்வு ஜோடியான இந்தியாவைச் சேர்ந்த Dhruv kapila - Tanisha krasto-வை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ஆடவர் இரட்டையர் Arif Junaidi - Muhammad Haikal, இன்று இந்தோனேசிய ஜோடியைச் சந்திக்கின்றனர்.
---------
Sultan Azlan Shah கிண்ண ஹாக்கி போட்டியில், இன்றிரவு பாகிஸ்தானைச் சந்திக்கிறது தேசிய அணி !
அவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தை, இரவு மணி 7.30 தொடங்கி, Astro அலைவரிசை 802 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.