
அமெரிக்கா தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் காலம், உலகக் கிண்ணத்துக்குப் பிறகு முடிவுறும் நிலையில், தம்மை நாடி வரும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க தயார் என்கிறார், Mauricio Pochettino !
அமெரிக்க அணியுடன் தொடர்வதில் தமக்கு மகிழ்ச்சி தான் எனக் கூறிய அவர், ஐரோப்பிய கிளப் காற்பந்துக்கு மீண்டும் காலடி எடுத்து வைப்பதையும் நிராகரிக்கவில்லை.
அண்மையில், Igor Tudor நீக்கப்பட்டதால், Pochettino தனது முன்னாள் கிளப்பான Tottenham-முக்கு திரும்பலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.
ஆனால், Spurs-சோ, தற்போது Brighton-னின் முன்னாள் பயிற்சியாளர், Roberto De Zerbi-யுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
--------
Borussia Dortmund-னின் Waldemar Anton மீது, இரண்டு கிளப்புகள், கடும் ஆர்வம் காட்டி வருகின்றனவாம் !
Man United மற்றும் Atletico Madrid தான், அக்கிளப்புகளாகும்.
அந்த தற்காப்பு ஆட்டக்காரர், Bundesliga கிளப்பில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி, அவ்வணியின் முக்கியமான தலைமைப் பாத்திரமாக உருவெடுத்துள்ளார்.
---------
2028 LOS ANGELES ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட்டுகள், ஏப்ரல் 9-ஆம் தேதி முதல், பொதுமக்களுக்கு விற்பனைக்கு விடப்படவுள்ளன !
ரசிகர்கள் ஏமாற்றப்படாமல் இருக்க, ஏற்பாட்டாளர்கள், சரிபார்க்கப்பட்ட மறுவிற்பனை தளங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.
இதன் மூலம், அங்கீகரிக்கப்படாத டிக்கெட் மறுவிற்பனையாளர்கள் மூலம், அதிக விலை கொடுத்து வாங்கும் அபாயத்திலிருந்து ரசிகர்கள் பாதுகாக்கப்படுவர்.