
Erling Haaland எதிர்காலம் குறித்து, Manchester City அமைதி காத்து வருகின்றது !
அந்த தாக்குதல் ஆட்டக்காரர், அணியிலேயே தொடர்வார் எனும் பெருத்த நம்பிக்கை சிட்டி இருக்கிறது.
இதனிடையே, Real Madrid தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் Riquelme, தாம் வெற்றி பெற்றால் Haaland, ரியாலில் ஒப்பந்தமாவார் என்கிற பெரிய கூற்றை வெளியிட்டுள்ளதை அடுத்து, சிட்டி அந்த நம்பிக்கையை வெளிக்கொணர்ந்தது.
----------
இதனிடையே, ரியால் Madrid தலைவராக மீண்டும் பதவியேற்றால், Liverpool-லின் Ibrahima Konaté-வையே தாம் முதலில் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக, Florentino Pérez தெரிவித்துள்ளார் !
Liverpool-லுடனான Konaté-வின் ஒப்பந்தம் இப்பருவத்தோடு காலாவதியாகிறது.
---------
தேசிய பூப்பந்து வீரர் Ng Tze Yong, Aichi-Nagoya ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆரம்ப பட்டியலில் இடம்பெறாதது, அவரது தேசிய அணியுடன் இருக்கும் எதிர்காலம் குறித்து, மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது !
சனிக்கிழமை நடைபெறும் BAM மன்ற கூட்டத்துக்குப் பின்னரே, இறுதி பட்டியல் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடமாக, அவர் காயப் பிரச்சனையால் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
----------
தேசிய squash தாரகை S.சிவசங்கரி, British பொது squash போட்டியில், மூன்றாவது சுற்றோடு தனது பயணத்தை முடித்துக்கொண்டுள்ளார் !