Skip to main content

Advertisement

Neymar அணியை விட்டு செல்லமாட்டார் !

 

 

MLS அணியான Cincinnati-டுக்கு இப்பருவ இறுதியில், Série A கிளப் Santos-சின் Neymar மாறிச் செல்ல மாட்டார் !

அதற்கான பேச்சுவார்த்தையும் பல மாதங்களுக்கு முன்பே முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

Santos-சுக்கும், அவரை வேறு கிளப்புக்குக் கொடுக்க மனமில்லையாம்.

இவ்வேளையில், அந்த பிரசீலிய வீரர், காற்பந்து திருவிழாவிலேயே, முழு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

--------

இவ்வேளையில், இன்று காலை நடைபெற்று முடிந்த அத்திருவிழாவின் குழு நிலையிலான ஆட்டத்தில், ஜப்பான் 1-1 என சுவிடனுடன் சமநிலை கண்டது !

நெதெர்லாந்து 3-1 என துனிசியாவை வீழ்த்தியது.

அமெரிக்கா 2-3 என துருக்கியேவிடம் வீழ்ந்தது.

பாராகுவாய், ஆஸ்திரேலியாவுடன் கோலின்றி சமநிலை கண்டது.

---------

நாளை, France - Norway-யுடம் மோதுகின்ற வேளை, Spain - Uruguay-யைச் சந்திக்கிறது !

-------

இதனிடையே, கடைசி 32 அணிகளுக்கான ஆட்டத்தில், Brazil, ஜப்பானைச் சந்திக்கின்றது !

நெதெர்லாந்து, மொரொக்கோவை எதிர்கொள்கிறது.

அமெரிக்கா, Bosnia-வுடன் மோதுகிறது.

----------

சுயேச்சை வீரராக தனது புதிய பயணத்தை அடுத்த வாரம் தொடங்கவுள்ள, தேசிய பூப்பந்து ஆடவர் ஒற்றையர் Ng Tze Yong, ஏற்கனவே புதிய பயிற்சி மையத்தைத் தேர்வு செய்துவிட்டாராம் !

அவர், தேசிய அணியின் முன்னாள் சக வீரரான Soong Joo Ven-னுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 30-ஆம் தேதி, மலேசிய பூப்பந்து சங்கத்திலிருந்து, தாம் அதிகாரப்பூர்வமாக வெளியேறவுள்ளதாக, Tze Yong அறிவித்தார்.

--------

இதனிடையே, தேசிய ஒற்றையர் வீரர்களுக்கான பூப்பந்து பயிற்றுநரோ, Tze Yong, BAM-மில் இருந்து விலக முடிவெடுத்திருந்தாலும், எதிர்காலத்தில் அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை, நிராகரிக்கவில்லை !

----------

அமெரிக்க பொது பூப்பந்து போட்டியில், ஆடவர் ஒற்றையர்களான Lee Zii Jia மற்றும் Cheam June Wei, இரண்டாம் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினர் !

RAAGA Aaha Siranta Isai!