Skip to main content

Advertisement

ஒரே ஆட்டத்தில் EPL கிண்ணத்தை வாங்கப் போகும் Arsenal!

EPL வெற்றிக் கிண்ணத்தை எட்டும் Arsenalலுக்கு இன்னும் ஒரே படி தான் எஞ்சியுள்ளது! 

Burnleyயுடனான இன்றைய ஆட்டத்தில் அவ்வணி 1-0 என வெற்றிப் பெற்றுள்ள நிலையில், பருவம் முடிய அதற்கு இன்னும் ஓராட்டமே எஞ்சியுள்ளது. 

Kai Havertzசின் கோல் Arsenalலுக்கு வெற்றியை ஈட்டித் தந்தது. 

வார இறுதியில் Crystal Palaceசுக்கு எதிரான ஆட்டத்திலும் வெற்றிப் பெற்றால், இப்பருவ EPL வெற்றியாளர் Arsenal-லே. 

ஒரு வேளை நாளை இரண்டாம் இடத்தில் உள்ள Man City, Bournemouthவுடனான ஆட்டத்தில் வெற்றிப் பெறத் தவறினால், நாளையே வெற்றிக் கிண்ணம் Arsenal வசமாவது உறுதியாகிவிடும். 

- 

பருவ இறுதியில் Pep Guardiola, Man City நிர்வாகி பொறுப்பை விடக்கூடும் என பல்வேறு ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன! 

ஞாயிற்றுக்கிழமை Cityயின் இப்பருவத்திற்கான கடைசி ஆட்டம் முடிந்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

- 

மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளனர் தேசிய மகளிர் இரட்டையர் Pearly Tan- M Thinaah. 

முதுகில் காயமடைந்த Pearlyயின் ஆயத்த வேலைகள் சில வாரங்களாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அம்முடிவை எடுத்துள்ளனர். 

- 

உலகக் கிண்ண Sepaktakraw போட்டியின் regu மற்றும் quadrant பிரிவுகளில் மலேசியா அரையிறுதிக்கு முன்னேறியிருக்கின்றது. 

RAAGA Aaha Siranta Isai!