
அண்மையில் மலேசிய பொது தடகளப் போட்டியில், மகளிருக்கான 1500 மீட்டர் பிரிவில் வெற்றி வாகை சூடிய கீத்தா சிவராஜா, ஒரு நாளைக்கு, இரு முறை பயிற்சி மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்நோக்குவதாக பகிர்ந்துகொண்டுள்ளார் !
13 வயதிலேயே தனது குடும்பத்தை விட்டு பிரிந்து, கோலாலம்பூரில் உள்ள விளையாட்டுப் பள்ளியில் சேர்ந்ததால், தாம் அடிக்கடி குடும்பத்தை நினைத்து ஏங்குவேன் எனக் கூறிய கீத்தா, நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற இலக்கே, தன்னை முன்னோக்கி நகர்த்துவதாக தெரிவித்தார்.
கடந்த சுக்மா போட்டியில், 800 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் பிரிவுகளில், இரண்டு தங்கங்களைக் குவித்ததைப் போன்று, இவ்வாண்டு நடைபெறும் சுக்மாவிலும், அதே பிரிவுகளில் இன்னும் சிறந்த நேரத்தைப் பதிவுச் செய்து, பதக்கங்களை வெல்ல வேட்கையோடு இருப்பதாக, அவர் சொன்னார்.
அது போக, அடுத்தாண்டின் சீ விளையாட்டுப் போட்டியிலும் தேர்வாகி வெல்ல கடுமையாக போராடுவதாக அவர் கூறினார்.
எதிர்காலத்தில், 800 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் பிரிவுகளில், தேசிய சாதனையை உடைக்க, ஜொகூரைச் சேர்ந்த அந்த இளம் வீராங்கனை இலக்குக் கொண்டுள்ளார்.
வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு தாம் ஒரு முன்னுதாரமாக இருக்க விரும்புவதாகவும், அவர் குறிப்பிட்டார்.
---------
சுவிட்சர்லாந்துக்கு எதிரான நாளைய காற்பந்து திருவிழாவின் குழு நிலையிலான ஆட்டத்தில், Canada-வின் Alphonso Davies களமிறங்குவது சந்தேகமே !
அந்த கேப்டன் காயப் பிரச்சனையில் இருந்து வந்ததே அதற்குக் காரணம்.
எனினும், அந்த Bayern Munich வீரர், குழு நிலையிலான கடைசி ஆட்டத்தில் விளையாட வாய்ப்புண்டு என, பயிற்றுநர் நம்பிக்கை தெரிவித்தார்.
--------
தாம் குணமடையும் வரைக்கும், தனது தேசிய அணியான Brazil-லிலேயே இருக்கப்போவதாக கூறுகின்றார், Raphinha !
அது வரைக்கும், Barcelona-வுக்கு திரும்பப் போவதில்லை என அந்த தாக்குதல் ஆட்டக்காரர் சொல்லியிருக்கிறார்.
இதனிடையே, நாளை Scotland-துடன் Brazil மோதுகிறது.