Skip to main content

Advertisement

ஓய்வு பெற போவதில்லை Ronaldo!

கால்பந்து சகாப்தம் Cristiano Ronaldo விரைவில் ஓய்வு பெறுவதாகத் தெரியவில்லை!

அந்த 41 வயது போர்த்துகள் வீரர், தனது கால்பந்து வாழ்க்கையைத் தொடர எண்ணம் கொண்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

ஆயிரம் கோல்கள் போடும் வாழ்நாள் சாதனையைப் படைக்கும் இலக்கில் அவர் உறுதியாக இருக்கின்றாராம்.

979 கோல்களை இதுவரைப் போட்டுள்ள Ronaldoவுக்கு இலக்கை அடைய இன்னும் 21 கோல்களே எஞ்சியுள்ளன.

----

ஆசிய போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களைத் தேசிய அணி பெற்றிருப்பது பாராட்டுக்குரியதே!

ஆனால், இன்னும் அவகாசமும் வாய்ப்பும் இருக்கிறது என நினைத்து மெத்தனமாக இருந்துவிட வேண்டாம் என விளையாட்டாளர்களை அறிவுறுத்தியுள்ளார் தேசிய  விளையாட்டு மன்றத்தின் தலைமை இயக்குனர்.

ஆறு தங்கப் பதக்க இலக்கில் மூன்று கிடைத்துவிட்டது என்றாலும், பதக்க வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

----- 

இதனிடையே நேற்று A குழு ஆட்டத்தில் சீனாவைச் சந்தித்த தேசிய மகளிர் ஹாக்கி அணி அதில் 0-4 என தோல்வி கண்டது!

 

நாளை அவ்வணி Chinese Taipeiயைச் சந்திக்கும்.

 

ஆசிய விளையாட்டுப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை Astro ARENA, Stadium Astro, ஐந்து பிரத்தியேக அலைவரிசைகள் மற்றும் Astro Go-வில் காணலாம்.

 

RAAGA Aaha Siranta Isai!