பார்சிலோனாவை மூன்றாவது முறையாக தோற்கடித்து தனது வெற்றி பாதையைத் தொடர்கிறது, Atletico Madrid !
Champions league முதல் கட்ட காலிறுதி ஆட்டத்தில், இன்று அதிகாலை அது பார்சிலோனாவை 2-0 என வீழ்த்தியது.
2014 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் இவ்விரு அணிகளும் இதே சுற்றில் மோதி, அட்லெட்டிகோ வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு, பார்சிலோனாவின் சொந்த அரங்கில் அட்லெடிகோ பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
இதனிடையே, PSG லிவர்பூலை 2-0 என வீழ்த்தியது.
அதனால், லிவர்பூலின் சாம்பியன்ஸ் லீக் கனவு கேள்விக்குறியாகியுள்ளது எனலாம்.
அனைத்து போட்டிகளையும் கணக்கிடுகையில் இது, லிவர்பூலுக்கு மூன்றாவது தொடர் தோல்வியாகும்.
--
ஆசிய பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தேசிய ஆடவர் இரட்டையர் Aaron Chia-Soh Wooi Yik மற்றும் மகளிர் இரட்டையர் Pearly Tan-M.Thinaah உட்பட மேலும் நான்கு தேசியப் பிரதிநிதிகள், இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
--
இதனிடையே, பூப்பந்து நிர்வாக அமைப்பு பல கீழ்நிலைப் போட்டிகளில் செயற்கை பூப்பந்துகளின் பயன்பாட்டைச் சோதனை செய்து வருகிறது.
வாத்து மற்றும் அன்னப்பறவைகளின் இறகுகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதே அதற்கு காரணம்.
-- .
மத்திய கிழக்கு மோதலால் அதிகரித்து வரும் செலவுகளை கருத்தில் கொண்டு, இவ்வாண்டின் ஆசிய போட்டி விளையாட்டுகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களை அனுப்புவது குறித்து இறுதி முடிவு எடுக்க உள்ளது மலேசிய ஒலிம்பிக் மன்றம்.
--
Stadiumastro விளையாட்டுத் தகவல் மையம், அண்மைய விளையாட்டுச் செய்திகளுக்கு Stadiumastro.comமை வலம் வாருங்கள்.