
2026 காற்பந்து திருவிழாவில், Spain தேசிய அணி சார்பில் களமிறங்க தயாராகி வரும், Barcelona-வின் இளம் வீரர் Lamine Yamal, லா லீகா இப்பருவத்தின் சிறந்த வீரர் என்ற விருதை வென்றுள்ளார் !
இப்பருவத்தில், அவர் 16 கோல்கள் மற்றும் 12 முறை கோலடடிக்க உதவியுள்ளார்.
அவர் ஒரே பருவத்தில் மூன்று முறை மாதத்தின் சிறந்த வீரர் என்ற விருதை வென்ற முதல் வீரராகவும் திகழ்ந்தார்.
---------
Real Madrid தலைவர் தேர்தலில் தாம் வெற்றி கண்டால், முன்னாள் லிவர்பூல் நிர்வாகி Jurgen Klopp-பை, அணி நிர்வாகியாகத் தேர்வு செய்வேன் என்கிறார், Enrique Riquelme !
ஆனால், Klopp-பின் முகவரோ, அந்த ஜெர்மனியருக்கு, அணி பயிற்றுநராக திரும்ப திட்டமேதும் இல்லை என தெரிவித்திருக்கின்றார்.
Klopp தற்போது, Red Bull-லில் சந்தோசமாகத் தான் இருக்கின்றாராம்.
----------
இந்தோனேசிய பொது பூப்பந்து போட்டியில், ஒரு தேசிய பிரதிநிதி, அரையிறுதியில் கால் பதித்துள்ளனர் !
ஆடவர் இரட்டையர் Goh Sze Fei - Nur Izzuddin, தான் அவர்களாவர்.
இந்தோனேசிய பொது பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை, பிற்பகல் 1 மணிக்கு மேல், Astro அலைவரிசை 815-திலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.
---------
அடுத்த பருவ ஆசியான் கிளப் காற்பந்து போட்டியில், JDT-யும், Kuching City-யும் வெவ்வேறு குழுக்களில் இடம்பெற்றுள்ளன !
JDT, தாய்லாந்தின் Port FC, Lion City Sailors FC உள்ளிட்ட கிளப்புகளுடன் B குழுவில் இடம்பெற்றுள்ளது.
Kuching City FC, Buriram United FC, Ratchaburi FC உள்ளிட்ட அணிகளுடன் A குழுவில் இடம் பெற்றுள்ளது.