Skip to main content

Advertisement

பெருநடை ஜாம்பவான் G.சரவணனின் நலன் காக்கப்படும் !

 

 

தேசிய முன்னாள் பெருநடை ஜாம்பவான் G.சரவணனின் நலன் என்றும் புறக்கணிக்கப்படாது என இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சு உறுதியளித்துள்ளது !

Motor Neurone Disease எனும், ஒரு வகை நரம்பியல் நோயால் அவர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார் ;

இந்நிலையில் அவரின் குடும்பத்தின் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு கூறியது.

28 ஆண்டுகளுக்கு முன்பு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், சரவணன் 50 கிலோமீட்டர் பெருநடைப்போட்டியில் தங்கம் வென்று, நாட்டின் பெயரை மணக்கச் செய்ததை, அமைச்சு நினைவுக்கூர்ந்தது.

--------

தேசிய ஆடவர் பூப்பந்து ஒற்றையர் Lee Zii Jia-வின் காயம் அவ்வளவு பெரியதானதல்ல என்கிறார், பூப்பந்து பயிற்சி இயக்குநர் !

தோமஸ் கிண்ண பூப்பந்து போட்டிக்கான முதல் நாள் பயிற்சியின் போது, Zii Jia-வுக்கு சிறியளவில் அடிபட்டதை அடுத்து, இயக்குநர் அவ்வாறு கூறினார்.

எனவே, Zii Jia-வின் காயம் தீவிரமானது அல்ல என்பதால், தேசிய அணியின் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை என அவர் கூறினார்.

அந்த வீரர் விரைவில் மீண்டு, பயிற்சிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

---------

Newcastle-லின் Sandro Tonali-யை ஒப்பந்தம் செய்யும் manchester United-டின் முயற்சியில் முன்னேற்றம் தெரிகிறது !

காரணம், இப்பருவ இறுதியில், Newcastle சில முக்கிய விரர்களை, சரியான விலைக்கு விற்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதனால், அந்த மத்தியதிடலாட்டக்காரரை, Newcastle விற்கும் என யுனைடட் அதீத நம்பிக்கையில் உள்ளதாம்.

RAAGA Aaha Siranta Isai!