
2027 வரவு செலவு அறிக்கையின் கீழ் பிரதமர் அறிவித்த விளையாட்டுத் துறைக்கான எல்லா ஒதுக்கீடுகளும், முறையாக சம்பந்தப்பட்ட அமைப்புக்களை சென்று சேறும்!
அதனை தமது தரப்பு உறுதிச் செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது இளைஞர் விளையாட்டு அமைச்சு.
ஒலிம்பிக்கின் Road To Gold திட்டம் உள்ளிட்ட உயர்தர மேம்பாட்டுத் திட்டங்களுக்காக பட்ஜட்டில் 460 மில்லியன் ரிங்கிட் அறிவிக்கப்பட்டது.
------
டென்மார்க் பொது பூப்பந்து போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் தேசிய மகளிர் இரட்டையர் Pearly Tan M Thinaah.
நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்றில் அவர்கள் Hong Kong வீராங்கணைகளை நேரடி செட்களில் வீழ்த்தினர்.
அவர்களுடன் ஆடவர் இரட்டையர் Aaron Chia- Soh Wooi Yik உள்ளிட்ட மேலும் சில தேசிய பிரதிநிதிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
டென்மார்க் பொது பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை இன்று மாலை ஐந்து மணி தொடங்கி Astro Badminton அலைவரிசை 815 மற்றும் சூக்காவில் காணலாம்.
------
ஆசிய Champions லீக் இரண்டு கால்பந்தாட்டத்தில், Kuching City சொந்த அரங்கிலேயே , Hong Kong கிளப்பான Kitchee FC,யுடன் 1-1 என சமநிலை கண்டது!
தொடக்க ஆட்டத்தில் Phnom Penhனிடம் 1-2 என தோற்ற Kuching Cityக்கு இது முதல் புள்ளியாகும்.