Skip to main content

Advertisement

பூப்பந்து ; சில தேசிய வீரர்கள் இன்று முதல் சுற்றில் !

 

சிங்கப்பூர் பொது பூப்பந்து போட்டியில், ஆடவர் இரட்டையர் Kang Khai Xing - Aaron Tai, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் !

அவர்கள், முதல் சுற்றில், சக நாட்டு இணையான Mohd Azriyn Ayub - Tan Wee Kiong-கை வீழ்த்தினர்.

இதனிடையே, இன்று முதல் சுற்றில் சில தேசிய பிரதிநிதிகள் விளையாடுகின்றனர்.

Aaron Chia - Soh Wooi Yik, மகளிர் இரட்டையர் Pearly Tan - M.Thinaah ஆகியோரும் அதிலடங்குவர்.

சிங்கப்பூர் பொது பூப்பந்து போட்டியை இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.

----------

Arsenal நிர்வாகி Mikel Arteta, ஆண்டின் சிறந்த பிரிமியர் லீக் நிர்வாகி விருதை முதன் முறையான வென்றுள்ளார் !

22 ஆண்டுகளுக்குப் பிறகு,  Arsenal-லை EPL பட்டத்துக்கு அழைத்துச் சென்றதே அதற்குக் காரணம்.

-----------

25 ஆண்டுகளில் முதன்முறையாக Coventry-யை, பிரிமியர் லீக்கிற்குக் கொண்டு வந்ததற்காக, Frank Lampard, லீக் நிர்வாகிகள் சங்கத்தின், ஆண்டின் சிறந்த நிர்வாகி விருதை வென்றுள்ளார் !

அந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட, Arsenal நிர்வாகி Mikel Arteta, Aston Villa-வின் Unai Emery, Bournemouth-தின் Andoni Iraola, Manchester City-யின் Pep Guardiola ஆகியோரையும் தாண்டி, Lampard அவ்விருதை தட்டிச் சென்றார்.

RAAGA Aaha Siranta Isai!