Skip to main content

Advertisement

பூப்பந்து வீரர்களிடம் கட்டொழுங்கு பிரச்சனை !

 

 

தேசிய பூப்பந்து வீரர்களிடையே, கட்டொழுந்து பிரச்சினைகள் இன்னும் இருப்பதை, மலேசிய பூப்பந்து சங்கம் ஒப்புக்கொண்டுள்ளது !

முன்னர் இருந்த சில பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டாலும், இன்னும் சில விவகாரங்கள் தீர்வு காணப்பட வேண்டியுள்ளதாக,  BAM செயல்திறன் குழுவின் தலைவர் Datuk Seri Lee Chong Wei தெரிவித்தார்.

அனைத்து வீரர்களையும், முழுமையாக கவனம் செலுத்த வைத்து, விதிமுறைகளை முறையாகப் பின்பற்றச் செய்ய காலம் தேவைப்படும் என்றும், ஒரே இரவில் இதைச் சரிசெய்துவிட முடியாது என்றும் அவர் கூறினார்.

அண்மையில், பயிற்றுநர்கள் இந்தப் பிரச்சனை குறித்து கவலை தெரிவித்திருந்தனர்.

முன்னதாக, புக்கிட் கியாராவில் உள்ள மலேசிய பூப்பந்து அகாடமி விடுதியில் தங்க வேண்டும் எனும் விதிமுறையை, சில வீரர்கள் பின்பற்ற மறுத்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அந்தப் பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டுவிட்டது.

----------

PSG-க்கு எதிரான நாளைய சூப்பர் கிண்ண கால்பந்தாட்ட இறுதியாட்டத்தில், Aston Villa-வின் மூன்று வீரர்கள் களமிறக்கப்படமாட்டார்கள் என்பதை, அதன் நிர்வாகி உறுதிப்படுத்தியுள்ளார் !

Ollie Watkins, Ezri Konsa, Emi Martinez ஆகியோரே அம்மூவராவர்.

அண்மைய, கால்பந்து திருவிழாவில் விளையாடி முடித்த அவர்களுக்கு ஓய்வு வழங்க ஏதுவாக, அம்முடிவு எடுக்கப்பட்டதாக, நிர்வாகி  Unai Emery கூறினார்.

PSG - Aston Villa மோதும் ஆட்டத்தை, அதிகாலை 3 மணி தொடங்கி, Astro அலைவரிசை 820 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.

---------

25 வயதான உக்ரைன் வீரர் Mykhaylo Mudryk-கை, இரவல் அடிப்படையில் வேறு கிளப்புக்கு அனுப்ப, Chelsea தயாராக உள்ளது !

அவரை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டும் 3 Premier League கிளப்புகளில், Coventry City-யும் அடங்கும் என கூறப்படுகிறது.

RAAGA Aaha Siranta Isai!