ஆசிய Champioship பூப்பந்து போட்டியில், தேசிய கலப்பு இரட்டையர் Chen Tang Jie-Toh Ee Wei யின் சவால் முடிவுக்கு வந்துள்ளது.
காலிறுதி சுற்றில் அவ்விணை தென் கொரிய ஜோடியிடம் வீழ்ச்சியைச் சந்தித்தது.
இதனிடையே, மகளிர் இரட்டையர் Pearly Tan-M Thinaah மற்றும் ஆடவர் இரட்டையர் Aaron Chia-Soh Wooi Yik இன்றைய காலிறுதி சுற்றில் களமிறங்கியுள்ளனர்.
--
நாட்டின் கலப்பு இரட்டையர் வீரரான Hoo Pang Ron தேசிய அணியிலிருந்து விலக உள்ளார்.
அவர் தற்போது சுயேட்சை வீராங்கனை Lai Pei Jing உடன் இணைந்திருப்பதே அதற்கு காரணம்.
அப்புதிய கூட்டணி அடுத்த மாதம் நடைபெறவுள்ள மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் களமிறங்கவுள்ளது.
--
2026 தாமஸ் கிண்ண பூப்பந்து போட்டிக்கு, தேசிய அணியை வலுப்படுத்த,ஆடவர் ஒற்றையர் Lee Zii Jia களமிறங்கவுள்ளார்.
நீண்ட நாள் காயத்தால் அவதியுற்று வந்த அவர், தற்போது 100 விழுக்காடு உடற்தகுதியுடன் இருப்பதாக அவரின் பயிற்றுநர் தெரிவித்துள்ளார்.
--
இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்தாட்டத்தில், நாளை அதிகாலை WOLVE-West Ham ஐ எதிர்க்கொள்கிறது.
WEST HAM –WOLVE மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிப்பரப்பை நாளை அதிகாலை மணி 3 தொடங்கி ASTRO அலைவரிசை 811 மற்றும் சூக்காவில் காணலாம்.
அனைத்து ஆகக் கடைசி விளையாட்டுச் செய்திகளையும் STADIUM ASTRO.COM மில் இன்றே தெரிந்து கொள்ளுங்கள்.