Skip to main content

Advertisement

புதிய பலமான விளையாட்டு வீரர்கள் உருவாகுவது அவசியம் !

 

 

புதிய தலைமுறை விளையாட்டு வீரர்களை தொடர்ந்து உருவாக்குவது மிக முக்கியம் என இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் !

நாட்டின் விளையாட்டு சிறப்பை தொடர்ந்து நிலைநிறுத்த, அது அவசியமாகிறது என அவர் கூறினார்.

எந்தவொரு விளையாட்டாக இருந்தாலும், புதிய வீரர்களை உருவாக்கும் முயற்சியை அலட்சியப்படுத்தக் கூடாது.

இல்லையெனில், தற்போதைய தலைமுறை வீரர்களுக்கும் புதிய தலைமுறை வீரர்களுக்கும் இடையே, பெரிய இடைவெளி உருவாகும் அபாயம் உள்ளது, என்றாரவர்.

---------

Bournemouth-துக்கு எதிரான இன்றைய பிரிமியர் லீக் ஆட்டத்தில், Arsenal-லின் சில முக்கிய வீரர்கள் களமிறங்குவது சந்தேகமே !

Martin Odegaard, Bukayo Saka ஆகியோர் அதிலடங்குவர்.

அவர்கள் காயப் பிரச்சனையில் அவதியுற்றிருப்பதே அதற்குக் காரணம்.

Arsenal புள்ளிப்பட்டியலில் 70 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Arsenal - Bournemouth மோதும் ஆட்டத்தை, இரவு மணி 7.30-க்கு, Astro அலைவரிசை 811 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.

----------

இதனிடையே, புள்ளிப்பட்டியலில் 6-ஆவது இடத்தில் இருக்கும் லிவர்பூல், இன்று Fulham-முடன் திடலில் களமிறங்குகிறது !

அவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, Astro அலைவரிசை 811-றிலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம். 

RAAGA Aaha Siranta Isai!