Skip to main content

Advertisement

புதிய பயிற்றுநரின் தலைமையில் புதிய அத்தியாயம் !

இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்தாட்டத்தில் செல்சி, புதிய பயிற்றுநரின் தலைமையில் புதிய அத்தியாயத்தைத் தொடக்கியுள்ளது !

இன்று அதிகாலை நடைப்பெற்ற Fulham-க்கு எதிரான ஆட்டத்தில் அது, 3-2  என வெற்றி கண்டது.

அவ்வாட்டத்தில்,The Blue-சின் தாக்குதல் வீரர் cole palmer அனைவரது கவனத்தையும் ஆட்கொண்டதோடு, அணி நிர்வாகி Xabi Alonso வின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

கடந்த பருவத்தில் ஏற்பட்ட காயப் பிரச்சனையையும் மீறி , அவர் முதல் கோலைப் போட உதவியதோடு,செல்சிக்கான வெற்றி கோலையும் போட்டு அசத்தியுள்ளார்.

மேலும், அணியின் சக தாக்குதல் வீரர்களான Joao Pedro, Morgan Rogers ஆகியோருடன் இணைந்து, இப்பருவம் முழுவதுமே அவர் அணிக்கு முக்கிய பங்காற்ற வேண்டும் என Xabi Alonso கேட்டுக் கொண்டார்.

--

பிரேசிலிய கிளப்பான Palmeiras வீரர் Allan Elias ஐ ஒப்பந்தம் செய்ய Man சிட்டி 34 மில்லியன் பவுண்ட் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது.

22 வயதான அவர், டோட்டன்ஹாமில் சேரவிருக்கும் Savinho-வுக்கு நேரடி மாற்று தேர்வாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

--

தொடர்ந்து இரு பந்தயங்களில் வெற்றி பெற்ற மெக்லாரன் ஓட்டுநர் லாண்டோ நோரிஸ்,தற்போது F1 உலக வெற்றியாளர் பட்டத்துக்கான உண்மையான போட்டியாளராக மாறியுள்ளதாக, Mercedes அணி தலைவர் Toto Wolff தெரிவித்துள்ளார்.

--

2026 சுக்மா விளையாட்டுப் போட்டியில், சிலாங்கூர் ஒட்டுமொத்த வெற்றியாளராக முடிசூடியது !

பத்து நாட்கள் நடைபெற்ற அப்போட்டியை வழிநடத்திய அம்மாநிலம்,101 தங்கம், 73 வெள்ளி, 71 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

பதக்கப் பட்டியலில் கூட்டரசுப் பிரதேசங்கள் இரண்டாம் இடத்தையும், திரங்கானு மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

இதனிடையே, சிலாங்கூர் நீச்சல் வீராங்கனை எலிசா டான், தனிப்பட்ட முறையில் ஏழு தங்கப் பதக்கங்களை வென்று சிறந்த தடகள வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பஹாங் துப்பாக்கிச் சுடும் வீரர் சியான் ஜென் ஹாங், மொத்தம் ஒன்பது தங்கப் பதக்கங்களை வென்று சிறந்த தடகள வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

--

இவ்வேளையில், இவ்வாண்டு SUKMA விளையாட்டு போட்டிகளைச் சிறப்பாக வழிநடத்தி முடித்த சிலாங்கூர் மாநில அரசுக்கும், MB அமிருடின் ஷாரிக்கும் பிரதமர் அவர்தம் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.


சிலாங்கூர் ஒட்டுமொத்த வெற்றியாளராக வெற்றி பெற்றதுடன், போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கும் பயிற்றுநர்களுக்கும் பிரதமர் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

--

இதனிடையே, சிலாங்கூர், ஒட்டுமொத்த வெற்றியாளரானதைக் கொண்டாடும் விதமாக, மாநில அரசு செப்டம்பர் 1 ஆம் தேதியை மாநில விடுமுறையாக அறிவித்துள்ளது.

RAAGA Aaha Siranta Isai!