
அடுத்த மாதம் நடைபெறும், Atletico Madrid-டுக்கு எதிரான இரண்டு Champions லீக் காலிறுதி ஆட்டங்களிலும், Barcelona, Raphinha-வை இழக்கக்கூடும் !
அந்த நட்சத்திர வீரர் காயமடைந்து, சுமார் ஒரு மாத காலம் ஓய்வில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.
France அணிக்கு எதிரான நேற்றைய நட்புமுறை ஆட்டத்தில், Brazil தேசிய அணிக்காக விளையாடிய போது, Raphinha-வுக்கு அடிபட்டது.
---------
உலகக் கிண்ணத்தில், இங்கிலாந்து தேசிய அணிக்காக Phil Foden விளையாடாமல் போகலாம் !
அக்கிண்ணத்துக்கான இறுதி வடிவம் காணும் அணியில், அந்த மத்திய திடலாட்டக்காரர் இருப்பாரா என்பது சந்தேகமாகியுள்ளது.
Uruguay-க்கு எதிரான 1-1 என சமநிலை கண்ட இன்றைய அனைத்துலக நட்புமுறை காற்பந்தாட்டத்தின் போது, அவர் காயமைடைந்ததே அதற்குக் காரணம்.
----------
தேசிய பூப்பந்து அணியில் இருந்து, அடுத்ததடுத்து வீரர்களை இழப்பதைத் தடுக்க, அவ்வணியில் இருக்கும் சில முக்கிய பிரச்சனைகள், BAM கூட்டத்தில் முன்வைக்கப்படும் !
Datuk Seri Lee Chong Wei அதனை தெரிவித்துள்ளார்.
அண்மையில், BAM-மில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த, மகளிர் இரட்டையர் வீராங்கனை Go Pei Kee-யிடம் காரணங்களைக் கேட்டப்போது, சிலவற்றை தீர்க்கக்கூடியவையாக இருந்ததை மேற்கோள்காட்டி, Lee Chong Wei அவ்வாறு சொன்னார்.