Skip to main content

Advertisement

Spain வெற்றி கண்டாலும், முழுமை திருப்தி இல்லை !

2026 கால்பந்து திருவிழா குறித்த செய்திகள் !

இன்றைய ஆட்டத்தில், Austria-வை 3-0 என வென்றிருந்தாலும், அணியில் இன்னும் மேம்படுத்த வேண்டிய பல அம்சங்கள் இருப்பதாக, Spain பயிற்றுநர் தெரிவித்துள்ளார் !

எனவே, தற்போதைய வெற்றியால் முழுமையாக திருப்தியடைவது சரியானது அல்ல என்றும் அவர் கூறினார்.

Spain, இதுவரை, ஒரு கோலைக் கூட கோட்டை விடாமல், தோல்வியின்றி விளையாடி, கடைசி 16 அணிகள் மோதும் சுற்றில் நுழைந்துள்ளது.

Spain, தற்போது  நடைபெற்று வரும் போர்ச்சுகல் - Croatia-வுடனான மோதலில் வெற்றி பெறும் அணியை, கடைசி 16 அணிகளுக்கான சுற்றில் எதிர்கொள்ளும்.

--------

ஆஸ்திரேலியாவுடனான நாளைய கடைசி 32 அணிகளுக்கான ஆட்டத்தில், காயப் பிரச்சனை காரணமாக, எகிப்தின் Mohamed Salah களமிறங்குவது சந்தேகமே !  

அந்த கேப்டன், அணி பயிற்சியில் கலந்து கொண்டிருந்தாலும் கூட, அவரின் உடற்தகுதி இன்னும் முழுமையாக உறுதிச் செய்யப்படவில்லை என, எகிப்து பயிற்றுநர் தெரிவித்துள்ளார்.

---------

Julian Nagelsmann, ஜெர்மனி தேசிய கால்பந்து அணியின் பயிற்றுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது !

அவருக்கு பதிலாக, Liverpool-லின் முன்னாள் நிர்வாகி  Jurgen Klopp வரலாம் என கூறப்படுகிறது.

--------

கனடிய பொது பூப்பந்து போட்டியில், தேசிய ஆடவர் ஒற்றையர் Lee Zii Jia, இரண்டாம் சுற்றில், தைவானிய வீரரை தோற்கடித்து, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ! 

RAAGA Aaha Siranta Isai!